குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த 10 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தல், தேசிய பால் உற்பத்தியை ஊக்குவித்தல், தேசிய உணவுப் பயிர் உற்பத்திக்காக அரச காணிகளை உகந்தவாறு முகாமைத்துவப்படுத்துதல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டே குறித்த வர்த்தமானி தயாரிக்கப்பட்டது.
அதன் முதல் கட்டமாக இலங்கை பிரஜைகளுக்கு உறுதிப்பத்திரமற்ற காணிகளின் உரிமையை உறுதி செய்வதற்காக முறையான ஆவணமொன்றை வழங்குவதே அரசாங்கத்தின் திட்டம் என செப்டம்பர் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கான விண்ணப்பம் கோரலுக்கான கால எல்லை இம்மாதம் 30 ஆம் திகதி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எந்தவொரு எழுத்து மூல ஆவணமுமின்றி அரச காணிகளில் வசிப்பவர்களுக்கு சட்ட ரீதியான ஆவணம் வழங்குவதனை துரிதப்படுத்துவதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக நேற்று விடுக்கப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a comment