இது காஸாவில் இருந்து வந்த காட்சி...
- Syed Ali -
படத்திலிருக்கும் அந்த மனிதரின் கரங்களில் உள்ளது, நான்கு வயது குழந்தையின் உயிரற்ற உடல்.
இது காஸாவில் இருந்து வந்த ஓர் உருகவைக்கும் காட்சி.
அந்தக் கட்டப்பட்ட பொட்டலத்திற்குள் இருக்கும் குழந்தையின் பெயர் ரஸான்.
அந்த குழ்ந்தையின் மரணத்திற்கான ஒரே காரணம் பட்டினிதான். உணவு கிடைக்காமல் பசியால் வாடி, ஒருமுறை துடிக்கக்கூட திராணியற்று உயிர் நீத்தது அந்த குழந்தை.
குழந்தைகளுக்குக் குடிக்கப் பால் இல்லை; மருத்துவமனைகளில் மருந்துகளுக்குப் பஞ்சமே மிஞ்சுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், 76 குழந்தைகள் பசியின் கொடுமையால் சோர்வடைந்து தங்கள் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டனர்.
கடந்த மூன்று நாட்களில் பட்டினியால் மட்டுமே இறந்த நான்கு குழந்தைகளில் ரசானும் ஒருத்தி.
குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய பால், உணவு, அத்தியாவசிய மருந்துகள் அனைத்தையும் உலக பயங்கரவாத ரவுடியான இஸ்ரேல் கொடூரமாகத் தடுத்து நிறுத்தியுள்ளது.
பசியில் தவிக்கும் மக்களைச் சுட்டுக்கூட்டக்கொலை செய்வதோடு இதுவும் நடந்து கொண்டிருக்கிறது.
நம் நாட்டின் பாசிச ஆட்சியாளர்கள், இது குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் இருந்து விலகி நிற்கிறார்கள் என்பதையும் இங்கு இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஹிட்லரின் ஹோலோகாஸ்டின் மற்றொரு வடிவம் சியோனிச இஸ்ரேல் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், "இஸ்ரேலுக்கு ஜே" என்றும் "ஃபலஸ்தீனுக்கு முர்தாபாத்" என்றும் டெல்லியில் கூச்சலிட்ட சங் குண்டர்கள், இந்தியாவில் சங்பரிவார்களின் ஈவிரக்கமற்ற தன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றனர்.
Jayarajan C N

Post a Comment