Header Ads



தலைமைப் பதவியில், ரணில் நீடிப்பார்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு சரியானவர் தெரிவாகும் வரை தலைவர் பதவியில் இருந்து தற்போதைக்கு ரணில் விலகுவது இல்லை என்று முடிவு செய்து உள்ளதாக சிங்கள இணையத் தளம் ஒன்று தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத் தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்து இருக்கக்கூடிய தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக ரணிலை நாடாளுமன்றம் செல்லுமாறு பலரும் கோரி உள்ளதாகவும், அதனை அவர் பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஜனவரி வரை அவர் தலைவர் பதவியில் நீடிப்பார் என்று வதந்திகள் கட்சிக்குள்ளேயே பரவி வருகின்றன. ஆனால், அது ஜனவரி 2021 அல்லது ஜனவரி 2023 அல்லது ஜனவரி 2030 ஆக இருக்குமா என்று கூற முடியாது உள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து விலகுவதற்கு தொடக்கத்தில் அவர் எடுத்த முடிவினை அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களின் வேண்டுகோளுக்குப் பின்னர் மாற்றிக் கொண்டதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

5 comments:

  1. மீதமுள்ள அனைவரும் ரனிலை விட தகுதியானவர்கள்தானே.

    ReplyDelete
  2. லிபியாவின் கதாபி அவனுடைய வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருந்த அதே மனோநிலை தான் இந்த வீணாப் போன ரணிலுக்கும் இருக்கின்றது. அந்த பிறவி பல உலகத் தலைவர்களின் வேண்டுகோளின்படி பதவியை விட்டுக் கொடுத்தால் அவன் மரியாதையாக மரணித்திருக்கக்கூடும். அதேநிலைமை தான் இந்த ரணிலுக்கும். மரியாதையாக பதவியை விட்டுக் கொடுக்காமையின் விளைவை இன்னறும் கொஞ்சக்காலத்தில் உலக மக்கள் அறிந்து கொள்வார்கள்.

    ReplyDelete
  3. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

    إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الإِمَارَةِ، وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ القِيَامَةِ، فَنِعْمَ المُرْضِعَةُ وَبِئْسَتِ الفَاطِمَةُ»، وَقَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ حُمْرَانَ، حَدَّثَنَا عَبْدُ الحَمِيدِ بْنُ جَعْفَرٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ عُمَرَ بْنِ الحَكَمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَوْلَهُ

    நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தரும் சுகங்)களிலேயே பதவி(ப் பால்)தான் இன்பமானது. பாலை மறக்கவைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.

    ஆதாரம்: புகாரி 7148
    www.tamililquran.com/hadhees

    ReplyDelete
  4. Gadhafi cannot be compared with anyone.Libya is the country that look after the citizen very well.The profit of the oil money was distributed among the citizen. The only country in the world didnt get loan from US dominated world bank. Without knowing the facts dont comment here proffessional. Niyas Ibrahim.

    ReplyDelete
  5. Gadhafi cannot be compared with anyone.Libya is the country that look after the citizen very well.The profit of the oil money was distributed among the citizen. The only country in the world didnt get loan from US dominated world bank. Without knowing the facts dont comment here proffessional. Niyas Ibrahim.

    ReplyDelete

Powered by Blogger.