Header Ads



மகாநாயக்க தேரர்கள் முறையாக செயற்படுத்தியிருந்தால் பிரச்சினை பாரதூரமாகியிருக்காது

(இராஜதுரை ஹஷான்)


எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு    கிடைக்கப் பெற்றுள்ள ஒரு தேசிய பட்டியல் ஆசனத்திற்கு    மூன்று பிக்குகள்  முரண்பட்டுக் கொள்வது பௌத்த மத கொள்கைகளையும்,   பௌத்த மக்களையும்   அவமதிப்புக்குள்ளாக்கியுள்ளது.


இவ்விடயம் தொடர்பில் மாநாயக்க தேரர்கள் அதிக  கவனம் செலுத்த வேண்டும்.  மாநாயக்க தேரர்கள் தங்களின்  பொறுப்புக்களை   முறையாக செயற்படுத்தியிருந்தால்  இப்பிரச்சினை   பாரதூரமாக  தோற்றம் பெற்றிருக்காது என    தெற்கு பௌத்த பீட   பிரதான  சங்க நாயக்கர்   ஓமல்பே சோபித  தேரர் தெரிவித்தார்.


எம்பிலிபிடியவில் இன்று  இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்  கொண்டு கருத்துரைக்கையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


மாநாயக்க  தேரர்களுக்கு  பௌத்த சாசனத்துக்கு அமைய வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதா  என்ற  சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே இனியாவது இவவிடயத்தில்  மாநாயக்க தேரர்கள் கவனம் செலுத்த வேண்டும். அபேஜன பல வேகய   கட்சி  பௌத்த தேசிய வாதத்தை முன்னிறுத்தி   67 ஆயிரம்   மக்கள் ஆணையை பெற்றுள்ளது.


பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்   பௌத்த தேசிய வீரர்  அவர்  பாராளுமன்றம் செல்ல வேண்டும், தனக்கு பாராளுமன்ற செல்வதற்கு  சிறிதேனும் விருப்பம் கிடையாது என  அத்துரலியே  ரத்ன தேரர்    தேர்தல் பிரசார மேடைகளில்  பகிரங்கமாக  குறிப்பிட்டார். இவரது கருத்துக்கள் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நினைவுப்படுத்த வேண்டும்.    


இடம் பெற்று முடிந்த பொதுத்தேர்தலில்  அபேஜன பல வேகய கட்சி   பெற்றுக் கொண்ட   வாக்குகள்  ஒன்றும்  இறுதியல்ல. அது   பௌத்த மத உரிமைகளை  பாதுகாப்பதற்கான     வெளியாக மக்களின்    ஆதரவு இனி வரும்  காலங்களில்  அபேஜன பல வேகய  கட்சி    மக்களின் பெரும்பான்மை ஆதரவை நிச்சயம் கைப்பற்றும்.  என்ற  நம்பிக்கை உள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.