Header Ads



பொதுஜனப் பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின், குருநாகல் மாவடட முஸ்லிம் வர்த்தகப் பிரமுகர்களுடனான சந்திப்பு


ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் குருநாகல் மாவட்டக்கிளையின்  ஏற்பாட்டில்  குருநாகல் மாவடட முஸ்லிம் வர்த்தகப் பிரமுகர்களுக்கான விசேட மாநாடு குருநாகல் புளு ஸ்கை ஹோட்டலில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் தேசிய பட்டியலலுக்கான வேட்பாளருமான சட்டத்தரணி அலி சப்ரி தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்~ கலந்து கொண்டு சிறபித்தார். 

இந்நிகழ்வில் விசேட அம்சமாக காந்த சவின பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் அவர்களினால் வெளியிடப்பட்ட தேர்தல் பிரச்சாரத் துண்டுப் பிரசுரம் பிரதமர் மஹிந்த ராஜபக்~,  குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் முதன்மை வேட்பாளர் ஜொன்டன் பெர்னாண்டோ, தேசியப் பட்டியில் வேட்பாளர் மர்ஜான் பழீல் உள்ளிட்டவர்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைப்பதையும் சர்வ சமயத் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் கலந்து கொண்டதை இங்கு படங்களில் காணலாம். 

இக்பால் அலி


No comments

Powered by Blogger.