Header Ads



பள்ளிவாசல்களில் தொழுகின்ற சந்தர்ப்பம் இல்லாமலாகுவதை தவிர்ப்போம் - நமது உரிமைகளை பாதுகாப்போம்

அஷ்-ஷேக் பௌசுல் அமீர் (முஅய்யிதி)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்துல்லாஹி வபரகாதுஹூ

2020/07/03 ஆம் திகதியிலிருந்து அல் ஹம்து லில்லாஹ் நமக்கு பள்ளிவாயலின் முழுப் பரப்பையும் தொழுகைக்காக பயன்படுத்தக்கூடிய வாய்ப்பினை அல்லாஹுதஆலா தந்திருக்கிறான். சுகாதார அமைச்சு எல்லாக் கூட்டங்களுக்கும் உச்ச வரம்பு விதித்திருக்கிறார்கள். அதாவது ஓரிடத்தில் 500 பேருக்கு மேல் கூட முடியாது என்பதாக விதியொன்று இருந்தாலும், பள்ளிவாயலுக்கு அத்தகைய ஒரு உச்சவரம்பை போடாமல் அனுமதி பெற்றிருக்கின்றோம். 

அந்த வகையில் 3,000 பேர் வழமையாக தொழக்கூடிய பள்ளியில் ஆயிரம் பேர் தொழலாம் என்ற நிலை வந்திருக்கிறது. 2,100 பேர் தொழக்கூடிய பள்ளியிலே 700 பேர் தொழலாம் என எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. எனவே, அவர்கள் உச்சவரம்பை போடவில்லை. 

இப்பொழுது நாங்கள் நேற்று எப்படி தொழுதோம் என்பது எனக்குத் தெரியாது. இந்த வரையறைகளை பேணாமல், 3000 பேரும் தொழுவதற்கு முயற்சித்தால் சிலவேளை எங்களுக்கு பிரச்சினைகள் வரலாம். அப்படி ஏதும் நடந்து விடாமல், அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். அதற்கு அந்தந்த ஊர்க்காரர்கள் மட்டும் பொறுப்பு என்றாலும் முழு நாட்டிலும் உள்ள முஸ்லிம்களுடைய பள்ளிகளில் தொழுகின்ற சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும்.  

அதாவது 500 பேரை விட அதிகமாக ஒரு இடத்தில் கூட முடியாது  என்ற பொது விதி பள்ளிவாயல்களுக்கும் வந்தால் என்ன நடக்கும்? அதாவது 3000 பேர் தொழுத பள்ளியிலே ஆயிரம் பேர் நேற்று தொழுது இருப்பீர்கள். யாராவது இவற்றை பிரச்சினையாக்கி  இப்படியொரு கட்டுப்பாடு வந்தால் ஆயிரம் என்பது 500 ஆக குறைக்கப்படக் கூடிய வாய்ப்பிருக்கிறது என்ற இந்த ஆபத்தினை எங்களுடைய சமூகம் விளங்கிக் கொண்டு ஒத்துழைக்க வேண்டும்.

நாம் கட்டுப்பாடோடு இருந்தால் படிப்படியாக இந்த தடைகள் நீங்கும் போது நாங்கள் கூடுதலான வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

 இப்படியாக நாங்கள் இந்த முறையைப் பின்பற்றினால் இன்னொரு முறை கொரோனா வைரஸ் வந்தாலும் கூட நல்ல முறையில் சுகாதார விதிகளைக் பேணி நடக்கின்ற போது எங்களுடைய பள்ளிகளை மூடாமல் தொடர்ந்து வழிபாடுகளில்  ஈடுபடலாம். 

ஏனென்றால் சுகாதார அதிகாரிகள் அதனை ஒரு பிரச்சினையாக எடுக்கமாட்டார்கள். வியாழக்கிழமை ஜூலை மாதம் 2ஆம் திகதி நம்மவர்கள் பிரதி சுகாதார அத்தியட்சகர் அவர்களை சுகாதார அமைச்சில் சந்தித்தபோது, அவர்கள் முஸ்லிம் பள்ளிவாயல்கள் முறையாக நடக்கிறார்கள் என்று பாராட்டி பேசியிருக்கிறார்கள். இதுதான் நமக்கு வேண்டியது.  இந்த கருத்தை பேணி வருகின்ற போது எங்களுக்கு நிலைமைகளை சாதகமாக வைத்துக்கொள்ளலாம்.  

அதை விடுத்து புகையிரதத்தில் அப்படி நெருங்கி செல்கிறார்கள்; பஸ்ஸில் இப்படி நெருங்கி செல்கிறார்கள்; இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நாங்கள் காட்டி சுகாதார அமைச்சுடைய வழிகாட்டல்களுக்கு முரணாக நடந்தால், புகையிரத்தில் செல்பவர்களை தண்டிக்க மாட்டார்கள்; பஸ்ஸில் செல்கின்றவர்களை தண்டிக்க மாட்டார்கள். சந்தையில் நடப்பதையும் கண்டு கொள்ள மாட்டார்கள். தேர்தல் கூட்டங்களில் நடப்பதை பார்க்க மாட்டார்கள். எங்களை மட்டும் பெரிதுபடுத்தி யாராவது காட்டினால் அதற்கு பதில் சொல்வதற்கு எங்களுக்கு முடியாமல் இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

1 comment:

Powered by Blogger.