Header Ads



IS கொடிய பயங்கரவாதம் - கொலை செய்வேன் என மிரட்டிய மகன் - ஓய்வுபெற்ற முஸ்லிம் நீதிபதி வாக்குமூலம்


2016ம் ஆண்டு ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.அப்துல் கபூர் வேறு பல முஸ்லீம் தலைவர்களுடன் சேர்ந்து நல்லாட்சி அமைச்சர்கள் மங்களசமரவீர சாகலரத்நாயக்கவை சந்தித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவளிப்பதற்கு உறுதி பூண்ட இளைஞன் குறித்து எச்சரித்தனர் என்ற தகவல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வெளியாகியுள்ளது.

2016 இல் தனது பாடசாலை ஆசிரியர் ஒருவர் தன்னை அழைத்து தனது மகன் ஐஎஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டுள்ளான், அந்த அமைப்பிற்கு ஆதரவளிக்க உறுதி பூண்டுள்ளான் என ஆசிரியர் தெரிவித்தார் என ஓய்வுபெற்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

நான் எனது மகனிற்கு ஆலோசனை வழங்கினேன் அவன் என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினான் என குறிப்பிட்டார் 

என ஓய்வு பெற்ற நீதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

 இதனை தொடர்ந்து நிலைமையின் பாரதூர தன்மையை கருத்தில் கொண்டு அரசியல்வாதிகளை சந்திக்க தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவ்வேளை அமைச்சர்களாகயிருந்த மங்களசமரவீரவையும் சாகல ரட்நாயக்கவையும் சந்தித்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அந்த இளைஞன் கைதுசெய்யப்பட்டான் என ஓய்வுபெற்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.