July 27, 2020

கை விலங்கிடப்பட்ட ஜனாதிபதியே, தற்போது இருக்கின்றார் - இதனை மாற்ற பெரும்பான்மையை தாருங்கள்

கையில் விலங்கிடப்பட்ட ஜனாதிபதியே தற்போது இருப்பதாகவும் அதனை மாற்றுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்க வேண்டும் எனவும் அந்த கட்சியின் உறுப்பினரான சிங்கள திரைப்பட நடிகை அனுஷா தமயந்தி தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் நவீன வீர கெப்பட்டிபொல, வீர புரங்கப்பு, விகாரமஹாதேவி, யுகலா தேவி போன்றவர்களுக்காக உரையாற்ற நான் விரும்புகிறேன். அந்த போராட்ட குணத்தினால் வெற்றிக்கொண்ட நாடுபற்றியே பேசுகிறேன். பிசாசுகளை கூட கட்டிப் போட்டு வேலைகளை செய்விக்கும் தென் பகுதி இது. தெற்கின் பலத்தை காண்பிக்க வேண்டியது அவசியம்.

கைவிலங்கிடப்பட்ட ஜனாதிபதியே எமக்கு இருக்கின்றார். இதன் காரணமாகவே நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கோருகிறோம் எனவும் அனுஷா தமயந்தி குறிப்பிட்டுள்ளார்.

3 கருத்துரைகள்:

ஜனாஸாக்களை எரித்த குற்றத்திற்காக அவ்வாறு கைவிலங்கிடப்பட்டிருக்கலாம்.  அதனை அவிழ்த்துவிட உதவினால் இன்னும் என்னென்ன செய்ய இருக்கிறாரோ தெரியவில்லை! 

என்ன இருந்தாலும் ஜனாதிபதியின் லட்சணத்தை அவர்களது கட்சியினரே வெளிக் கொண்டுவருவதை பாராட்ட வேண்டும்.

தற்போதைய அரசியல் அமைப்பின் பிரகாரம் ஆட்சி அதிகாரங்கள் யாவும் ஜனாதிபதி அவரகளிடமும் பிரதம அமைச்சரிடமுமே குவிந்து காணப்படுகின்றன. எனவே நாட்டின் நட்ப்புகளை மிக எளிதாகக் கொண்டு செல்வதற்கு இதுவே போதுமானதாகும். மைத்திரிபால சிறிசேனவுடைய காலததில் அதாவது நல்லாட்சி நடைபெற்ற கடந்த ஐந்து வருடங்களிலும் நாட்டு மக்களுக்கு எதுவும் நல்லது நடைபெற்றுள்ளனவா என்றால் இல்லை என்ற பதிலே வரும். ஏதும் தீமையான விடயங்கள் நடந்தனவா என்று கேட்டாலும் இல்லை என்ற பதிலே வரும். எனவே அதிகாரங்கள் பற்றிய கவலை எவருக்கும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆயினும் நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் மாற்றுக் கட்சி ஆட்சிக்கு வருமாக இருந்தால் பிரதமர் வேறு கட்சியில் இருந்தால் மககளுக்கான சேவை மிகவும் நல்ல முறையில் விறுவிறுப்பாக நடைபெற வாய்ப்பு இருக்கின்றது. மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படமாட்டார்கள். அரசியலாளர்களைக் கேட்டால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாட்டு நடப்பிற்கு அதி சிறந்தது அல்ல என்றே கூறுவர். மக்களுக்கு எதிரான சட்டங்களும் உருவாகலாம். ஆட்சியாளர்களுக்கு எதிரான சட்டங்களும் உருவாகலாம். அதற்கு JR ஜயவர்த்தனாவின் ஆட்சிக் காலம் சிறந்த உதாரணமாகும்.
Under the current constitution, all powers are vested to the President and the Prime Minister. So, this is good enough to take the country's administrative and political activities very easily. If a question is being asked whether anything good happened during Maithipala Srisena’s governance; the answer will be “No”; and in returns, if anything bad happened, the answer might be “No”. So there is no need for anyone to worry about powers. However, if an alternative party comes to power in the forthcoming general election, and the Prime Minister is from another party, the service to the country is likely to be much better. People will not be affected in any way. If you ask politicians, a two-thirds majority will say that the country is not the best for the current situation. Laws can also be made against people. Laws against rulers can also be enacted indirectly. The tenure of JR Jayewardene is a prime example.

Post a comment