Header Ads



மதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்

முஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அத்துரலிய ரத்ன தேரர் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுக்காவிட்டால் உடனடியாக பேராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில்  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 முஸ்லீம் சமூகத்தில் உள்ள சில சக்திகள் மதவாதத்தை ஊக்குவித்தன என குற்றம்சாட்டியுள்ள அவர் அரசாங்கம் இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கையை எடுப்பதற்கான சரியான தருணம் இதுவென குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பின் தனியார் வங்கியொன்றில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து முஸ்லீம் தீவிரவாதிகள் பல சமூகவிரோத அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர் என அத்துரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளார்.

சிலமுஸ்லீம் கடைகள் குறிப்பிட்ட வங்கியை தாங்கள் புறக்கணிக்கபோவதாக அறிவித்தல் பலகைகளை காட்சிப்படுத்தியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இது இடம்பெறுவதற்கு அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் அரசாங்கத்தை ஆகியவற்றை மதரஸாக்கள், புர்கா மற்றும் காதிநீதிமன்றங்களை தடை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம், இந்த விடயம் குறித்து பௌத்த மதகுருக்களின் தலைமைப்பீடங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

9 comments:

  1. mendal person , please admint at angoda hospital

    ReplyDelete
  2. he thinking like sri lanka mean its his own home, first need to be ban Thaham pasal due to bridging child rights. in thaham pasal they are forcing the child to be away from society and forcing them to be ascetic.

    ReplyDelete
  3. இவண்ட இந்த கருத்தை வைத்தே அரசாங்கம் இவனை கைது செய்து சிறையில் அடைக்கலாம் ஏனனில் பேச்சில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிராகவும் மற்றும் துவேஷ கருத்துகளை முன் வைப்பதும் ஆகும்.
    மேற்கு உலகில் இவ்வாறு சிறுபான்மையினரை தாக்கும் கருத்துகளை யாரு சரி முன் வைத்தால் அரசாங்கமே கைது செய்து அதட்கான தண்டனைகளை வழங்குவார்கள்.

    ReplyDelete
  4. when you are comments be careful about the society, or JM should not publish this type of news, because some people writing comment without future threat, Sampath Bank matter was also not a healthy incident because one persons action can be make more harm, the person's aggressive Zaharan type speech cannot protect innocent people. Ladies should know what is Mask and what Burka, Mask is not Face cover and Face cover is not the mask. Amid Covid-19 WHO is order to wear mask, here without mask you cant go anywhere this is the health & Deference. ACJU should educate all Muslim about the current situation

    ReplyDelete
  5. ஒருவன் நாட்டில் அல்லது சமூகத்தில் தன்னைப் பிரபல்யமாக்க வேண்டுமாக இருந்தால் அவன் அவனாகவே அவனைப் பிரபல்யப்படுத்த வேண்டும். படித்தவர்களும் இந்தக்காலத்தில் பைத்தியங்களாக நடிக்கும்போது அவனைப் பிடிக்க வேண்டியவரகளும் பைத்தியக்காரர்களாக நடிக்க வேண்டிய நிலைமையில் எமது நாடும் இருக்கின்றது. இந்நிலைமை எமது நாட்டிற்கு ஏற்பட்ட பெரும் அபகீர்த்தி.

    ReplyDelete
  6. If the racist could talk against our rights and harass minority, why we can not talk about our rights? What kind of mentality you guys having? If someone can talk racism and hurt the minority by saying this our freedom of voice, then why we can not raise our voice against the racism and to protect of rights?

    ReplyDelete
  7. இவன் ஒரு மாங்கா மடையன்

    ReplyDelete
  8. @Sano; just tickle your hand or cheek. We are not living in a democratic western country!

    ReplyDelete

Powered by Blogger.