July 28, 2020

புர்கா - நிகாப் அணிபவர்கள் மீது, வன்முறையில் இறங்கப்போகும் ரத்ன தேரர்


(எம்.ஆர்.எம்.வஸீம்)

தேசிய ஒற்றுமைக்கு குந்தகமாக இருக்கும் மத பின்பற்றல்களை நிறுத்துவதற்கு ஜம்இய்யதுல் உலமா நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் புர்கா, நிகாப் அணிந்துவருபவர்கள் பொது இடங்களுக்கள் நுழையவிடாமல் இருப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்துக்கு  முன் அனுமதியின்றி நேற்று வந்திருந்திருந்த ரத்னதேரர் மற்றும் ஞானசார தேரர் கலந்துரையாடலுக்கு அனுமதி கிடைக்காத நிலையில் அறிக்கையொன்றை கையளித்துவிட்டு சென்றுள்ளனர்.

கையளிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை சமூகத்துக்குள் சிங்களம் முஸ்லிம் மக்கள் மத்தியில் சமூக பிளவு மற்றும் அவநம்பிக்கை தலைதூக்கி இருக்கின்றது.

இந்த நிலைமையை போக்கி சமாதான நிலைமையை ஏற்படுத்துவது அவசியமாகும். அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்துக்குள் புர்கா, நிகாப் அணிவது பாரியளவில் அதிகரித்திருக்கின்றது. இந்த அதிகரிப்பு அயல்நாடான பங்களாதேஷிலும் காணமுடியாத நிலைமையாகும். 

ஏனைய மத கலாசார அடையாளங்களை ஏற்றுக்கொள்வதற்கு  நாங்கள் தயார். என்றாலும் மத அடிப்படைவாதங்களை ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள்  தயார் இல்லை. சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் பிளவுகளுக்கு காரணமாக இருக்கும் மத பிரசாரம் அண்மைக்காலமாக தலைதூக்க ஜம்இய்யதுல் உலமா அமைப்பும் பொறுப்பு கூறவேண்டும் என்பதே எமது நம்பிக்கையாகும். 

அதனால் தேசிய ஒற்றுமைக்கு குந்தகமாக இருக்கும் மத பின்பற்றல்களை நிறுத்துவதற்கு ஜம்இய்யதுல் உலமா நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இதனை இவ்வாறு அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள ஜம்இய்யதுல் உலமா அமைப்பு முயற்சிக்காவிட்டால், அவ்வாறான ஆடைகளில் வருபவர்கள் பொது இடங்களுக்கு நுழையவிடாமல் தடுப்பதற்கு எங்களால் நடவடிக்கை எடுக்கநேரிடும். புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கு பல நாடுகள் தடைவிதித்திருக்கின்றன. ஒருசில முஸ்லிம் நாடுகளும் இதனை கட்டுப்படுத்தி இருக்கின்றன.

அதனடிப்படையில் பிரச்சினைகள் எதுவும் இன்றி, விசேட சட்டங்கள் அமுல்படுத்தல்கள் எதுவும் இல்லாமல், உங்களது அமைப்பு இந்த அடிப்படைவாத நிலைமையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நினைக்கின்றோம்.

அதேபோன்று நாடொன்றில் பொதுவான தேசிய ஒற்றுமையை கல்வியின் மூலமே ஏற்படுத்த முடியும். என்றாலும் மத்ரஸா பாடசாலை என்ற பெயரில் முதலாம் வகுப்பில் இருந்து 13 ஆம் வகுப்புவரை விசேட மத பாடசாலை கட்டமைப்பொன்றை, கல்வி அமைச்சின் நிர்வாகத்துக்கு அப்பாட்பட்டு மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையில் இருக்கும் அனைத்து பிள்ளைகளும் ஒரு பாடத்திட்டத்தையே கற்றொழுகவேண்டும்.

என்றாலும் மத்ரஸா பாடசாலைகளில் பல்வேறு தரத்தில் மத அடிப்படைவாதத்தை அடிப்படையாக அமைந்த கற்றல் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவது தற்போது வெளிப்பட்டிருக்கின்றது. சஹ்ரான் போன்ற மனித கொலைகாரர்களும் உருவாகுவது இவ்வாறான கல்வி முறையிலாகும்.

7 கருத்துரைகள்:

முல்லை முல்லால்தான் எடுக்க வேண்டும்.

பண்டாரநாயக்க அவர்களை கொலை செய்தது ஒரு பெளத்த துறவி என்பதற்காக அவ்வாறான அனைவரையும் குற்றவாளியாக்குவதோ அல்லது அவ்வாறான உடையினை இல்லாமல் ஆக்குவதோ தர்க்க ரீதியாகவோ மனித உரிமையினடிப்படையிலோ சரியான விடயமல்ல.

ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியான மதக் கோட்பாடுகள் இருக்கின்றன. அதனை அந்தந்த மதத்தைச் சார்ந்தவர்கள் கட்டாயம் பினபற்ற வேண்டும். ஒவ்வொரு மதத்தவரும் செய்ய வேண்டியது என்ன; செய்யக்கூடாதது என்ன; என்றெல்லாம் அம்அம்மதங்களே பட்டியல் போட்டு அம் மதத்தவரகள் பினபற்றும் பொருட்டு வழங்கியுள்ளன. பௌத்த மதத்தில் உள்ள ஒருவர் கிறிஸ்தவ கோயில் ஒன்றுக்கு சென்று வழிபடுவது குருநாகலிலிருந்து கொழும்பு செல்வதற்கு மட்டக்களப்பு பஸ்ஸில் ஏறியதற்கு சமமாகும். மத குருமார்கள் தத்தம் மதங்கள் என்ன கூறுகின்றன என்பதை நன்முறையில் தான் முதலில் கற்று அதனை மக்களுக்குப் தமது அறிவினையும் சேர்த்து அவரகளுக்கு புரியும் வகையில் போதிக்க வேண்டும். அதுதான் உண்மையான மத தர்மம் ஆகும். அதனை விட்டுவிட்டு இன்னொரு மதத்தின் அடிப்படையினுள் புகுந்து தர்க்கம் புரிவது மனுதர்மத்திற்கு ஒவ்வாத விடயமாகும். இதனை அரசும் பௌத்த பீடங்களும் அத்துரலிய மறறும் ஞானசார தேரர்கள் போன்றோர் இன்னமும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. கடந்த கால இவரகளது நடவடிக்கைகளும் தற்போதைய செயற்பாடுகளும் இவற்றிற்கு எல்லாம் அரசும் பௌத்த பீடங்களும்தான் ஒத்துழைப்பு வழங்குகின்றன என்ற ஐயப்பாட்டை நாளடைவில் பொதுமக்கள மனதில் ஏற்படுத்தினாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்நிலைமை தொடர்ந்து சென்றால் அரசும் நீதிமன்றங்களும் சட்டத்துறையும் நிர்வாகத்துறையும் செய்யவேண்டிய கடமைகளை பௌத்த தேரர்களே செய்யக்கூடும் என்ற நிலைமையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

நாட்டில் ஒழிக்கப்பட வேண்டிய எத்தனையோ குற்றச் செயல்கள் இருக்கின்றன. போதை வஸ்த்துப் பாவனை, இரவுக் கேளிக்கை விடுதிகள், விபசார நிலையங்கள், சூதாட்ட விடுதிகள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றை சமூகத்தில் இருந்து ஒழிப்பதற்கு மதநிறுவனங்கள் எப்படியான நடவடிக்கைகளை அரசுடன் சேர்ந்து எடுத்துள்ளன. மக்களை நல்வழிப்படுத்த வேண்டியது மத நிறுவனங்கள்தான். இப்படிச் செய்யாது அப்படிச் செய்தால் பாவம் மக்கள். மதகுருமார்களின் வழிமுறைகளைப் பின்பற்றி பிறழ்வான நடத்தைகளுக்கே அவரகள் ஆளாகிவிடலாம். இப்படியே போனால் இலங்கை குற்றங்களின் கூடாரமாக மாறுவதற்கு அரசும் பௌத்த பீடங்களுமே காரணமாகிவிடலாம்.

Each religion has its own set of religious principles. It must be followed by those belonging to the respective religion. What every religious person should do; What not to do; If so, these religions have made a list and provided it for the followers of those religions to follow. A Buddhist going to a Christian church and worshipping there is the equivalent of boarding a Batticaloa bus from Kurunegala to Colombo. The clergy must first learn himself what the religion preaches and then teach it to the people so that they can understand it along with their knowledge. That is the true religion. Leaving it and indulging in the logic of another religion is irrational. This does not seem to have been understood by the government and the Buddhist Head Quarters, such as Athuraliya and the Gnanasara Thera. It is not surprising, though, that the public is sceptical that the government and the Buddhist establishments are cooperating in their past and present activities. It is not surprising that if this situation continues, these Buddhist clergies will be able to carry out the duties of the government, defence, judiciary and the administration.

There are so many crimes that need to be eradicated in the country. Drug abuse, nightclubs, brothels, and casinos can all pile up like this. What steps have religious institutions taken with the government to eradicate these from society? It is the religious institutions that have to guide the people. Do not do this and sin if you do that. They may follow the instructions of the clergy and become subject to deviant practices. If this goes on, the government and the Buddhist clergy may be responsible for turning Sri Lanka into a crime tent.

Ellorum Kaavi poduvama????... Boolshit

If you like to do that , I like to same for both of you , if you come with yellow terrorist cloth, we will do same what you would do for hijjab women, we are respect our women, your talk is a bloody attack on Muslim
F**** idiot piggy ugly monk, careful in future

'தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்பது பழ(ம்)மொழி. 

புது(மை)மொழி:  'காடையனாகக் காவியணி'.


they are illiterate peoples, let them says whatever they want we don't bother, we have a law in the country, its a game of politics

Post a comment