Header Ads



புலனாய்வுத்துறையினர் வழங்கிய தகவல்களை ரணில் கருத்திற்கொள்ளவில்லை

இலங்கையின் உளவுத்துறை தகவல்களை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உணர்த்துவதில் முற்றிலும் பயனற்றது என்று தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி கபில ஹெந்தவிதாரன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று -08- சாட்சியமளித்தபோது அவர் இதனைக்குறிப்பிட்டார்.

2001 முதல் 2004ம் ஆண்டு வரை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்தபோது இராணுவப் புலனாய்வுத்துறையினர் வழங்கிய புலனாய்வுத் தகவல்களை அவர் கருத்திற்கொள்ளவில்லை என்று ஹெந்தவிதாரன குறிப்பிட்டார்.

அவரின் காலத்தில் இராணுவப் புலனாய்வினர் பல வழிகளிலும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதல்களுக்கு தொடர்ந்தும் கடுமையாக உழைத்ததாக ஹெந்தவிதாரன தெரிவித்தார்.

எனினும் ரணில் விக்கிரமசிங்க தமது புலனாய்வு தகவல்களை கவனிக்கவில்லை என்றும் ஹெந்தவிதாரன குறிப்பிட்டார். குதிரை ஒன்றை தண்ணீருக்கு அழைத்துச்செல்ல முடியும்.

எனினும் அதற்கு நீரை குடிக்கவைக்கமுடியாது. எனவேதான் 2015இல் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் தாம் பதவிவிலகி விட்டதாக ஹெந்தவிதாரன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.