Header Ads



ஜிந்துபிட்டியில் 143 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு

கொழும்பு -ஜிந்துபிட்டியில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி ஒரு வர் கண்டுபிடிக்கப் பட்டுள்ள நிலையில், 143 நபர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான தாக பொது சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த பகுதியில் வசிக்கும் 29 குடும்பங்களின் உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அப்பகுதி யின் பொதுச் சுகாதார சேவையாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 8 ஆம் தேதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இலங்கை நபர் ஒருவரே இவ்வாறு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபர் 14 நாட்கள் தனிமைப்படுத் தலை நிறைவு செய்து, கொழு ம்பு – ஜிந்துபிட்டி யிலுள்ள தனது வீட்டுக் குத் திரும் பியிருந்தார்.

அவரது வீட்டில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அந்த தனிமைப்படுத்தல் நிறைவடைந்த பின்னர் அவருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, அந்த பகுதி தற்காலிமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 29 குடும்பங்களைச் சேர்ந்த 143 பேர் தனிமைப் படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளவர்களில் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.