Header Ads



மோட்டார் போக்குவரத்து திணைக்களம், விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்


மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை பெற்றுக் கொள்ளும்போது ஏற்கனவே திகதிகளை ஒதுக்கிக் கொள்ளுமாறு குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது. 

குறித்த அறிக்கை கீழே... 

கோவிட் - 19 வைரஸ் தாக்கம் காரணமாக எழுந்துள்ள ஆபத்தான நிலைமைகள் படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலைமையில் நாட்டின் அனைத்து செயற்பாடுகளையும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்தினால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன் கீழ் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு இருந்த தடை நீக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு கொண்டுவரப்பட்டதுடன் அரச அலுவலகங்களால் வழங்கப்படும் சேவைகளையும் சுகாதார ஆலோசனைகளுக்கமைய முறையாக வழங்குவதங்கு தீர்மானிக்கப்பட்டது. 

இதுவரை நாட்டில் இந்த தொற்று நோய்த்தாக்கம் முழுமையாக அகலாத நிலையில் சமூக இடைவெளிகள் உள்ளிட்ட சுகாதார பழக்க வழக்கங்கள் என்பன உரிய துறையினர் வழங்கும் ஆலோசனைகளுக்கமைய பின்பற்றப்பட வேண்டியது எம் அனைவருடையதும் கடமையாகும்.

மேற்கண்ட நிலைமைகளின் கீழ் எமது திணைக்களத்தினால் சேவை பெறுநர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை சுகாதார வழிமுறைகளுக்குட்பட்டு சிற்சில வரையறைகளுக்கமைய வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் 2020.05.15 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் எமது திணைக்களத்தில் சேவையைப் பெற்றுக் கொள்ள விரும்புகிற சேவைபெறுநர்கள் நேரகாலத்துடன் தமக்குரிய திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகின்றது. 

ஏலவே நேரங்களை ஒதுக்கிக் கொள்ளாத பிறிதெந்த நபருக்கும் எமது திணைக்கள வளாகத்திற்குள் பிரவேசிக்க அனுமதியில்லை என்பதுடன் அவ்வாறு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாது வருவதன் காரணமாக ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் வேண்டப்படுகின்றீர்கள். 

தற்போது வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் அதிக நெரிசலாகக் காணப்படும் நிலைமைகள் தோன்றியுள்ளதால், மேலதிகமாக கீழே காட்டப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதனடிப்படையில் வார நாட்களில் மு.ப.9.00 தொடக்கம் பி.ப.4.00 மணிவரை அவ்விலக்கங்களில் தொடர்பு கொண்டு திகதிகளையும் நேரங்களையும் ஒதுக்கிக் கொள்ள முடியும் என அறிவிக்கின்றோம். 

காணப்படுகின்ற தொற்றுநோய் தாக்கங்கள் பரவுவதைத் தடுப்பதற்கு நீங்கள் வழங்கும் ஒத்துழைப்பை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். அத்தோடு எமது திணைக்களம் பின்பற்றும் இத்தகைய நடைமுறைகள் காரணமாக உங்களுக்கு ஏற்படும் அசளகரியங்களுக்கும் எமது கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


No comments

Powered by Blogger.