Header Ads



பேரினவாதிகள் எல்லா வடிவத்திலும், இனவாத சிந்தனையை புகுத்துகின்றனர் - முஜிபுர் ரஹ்மான்

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான ரத்தன ஜீவன் ஹூல் சிறுபான்மையினத்தை சேர்ந்த பிரதிநிதி என்பதாலேயே அரசாங்க தரப்பினர் அவர் மீது எதிர்ப்பை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர் என கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ரத்னஜீவன் சார்பில் கடந்த 2018 அரசியல் சதி முயற்சியின்போது வழக்கொன்றில் ஆஜராகிய ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வையும் பலிவாங்கும் நோக்கிலேயே கைது செய்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்ததாவது,

ராஜபக்ஷ அரசாங்கத்தை சார்ந்த அரசியல்வாதிகள் தொர்ந்து இனவாதத்தை மையப்படுத்தி அரசியல் முன்னெடுத்து வருகின்றமை இந் நாட்டை பாடுபாதாளத்திற்கே தள்ளிவிடும். அத்துடன், இன்னும் 50 அல்ல 100 வருடங்கள் கடந்தாலும் நாடு அபிவிருத்தி அடையப் போவதில்லை.

எனது பாட்டனின் காலத்தில் இந்த நாடு சுதந்திரத்துக்காக ஏங்கிக்கொண்டிருந்தது. தந்தையின் காலத்தில் தேசபிதாக்கள் ஒன்றிணைந்து பிரிதானியாவிடமிருந்து சுதந்திரத்தை பெற்றுத் தந்தனர். இதன்மூலம் சில காலத்திற்குள் இந்நாடு அபிவிருத்தி காணும் என அவர்கள் எதிர்ப்பாத்தனர். ஆனாலும், சுதந்திரம் கிடைத்த கொஞ்ச நாட்களிலேயே இனவாத பிசாசு இந்நாட்டை ஆக்கிரமித்துக்கொண்டது. அதனால் எம்மால் அபிவிருத்தியை அடைய முடியவில்லை. நான் வாழ்ந்த காலப்பகுதியில் இனவாததின் விளைவாக 30 வருட யுத்தத்தை சந்தித்தோம். விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இந்நாடு அபிவிருத்தியை நேக்கி பயணிக்கும் என எதிர்ப்பார்த்தோம். எமது பிள்ளைகளுக்கு ஒரு அமைதியான நாட்டை விட்டுச் செல்லலாம் என நினைத்தேம். ஆனால் யுத்தம் முடிந்து நாட்டை கட்டியெழுப்ப ராஜபக்சாக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தும் அதனை அவர்கள் துஸ்பிரயோகம் செய்தனர்.
30 வருட கால யுத்தம் முடிந்து ஓரிரு வருடங்களுக்கள் கடந்த பின்ன சிறுபான்மையினருக்கெதிரான செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

குறிப்பாக அது முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே அமைந்தது. முஸ்லிம்களை ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளிவிடும் முயற்சியில் சில பேரினவாத சக்திகள் முணைப்புடன் செயற்பட்டன. இதன் விளைவை நாம் 2019 ஏப்ரல் 21 இல் கண்டோம். எனினும் ஒரு குறிப்பிட்ட சிலர் மாத்திரமே பயங்கரவாதத்தின் பக்கம் சென்றனர். ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஆயுதப் போராட்டத்தையோ பயங்கரவாதத்தையோ நாம்பவில்லை. இதில் இனவாதிகள் தோல்வி கண்டாலும் இதைவைத்து அதிகாரத்துக்கு வர முயற்சிக்கின்றனர்.

பேரினவாதிகள் ராஜபக்ஷாக்களின் கரங்களை பிடித்துக்கொண்டு நாட்டில் இனவாதத்தை விதைத்து இந்நாட்டை மிக மோசமான நிலைக்குக் கொண்டு செல்வர் என்பது நிச்சயமாகும். எமது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பேரப்பிள்ளைகளுக்கும் அமைதியான இலங்கையை காண முடியாது என்றே தோன்றுகிறது.

பேரினவாதிகள் எல்லா வடிவத்திலும் இனவாத சிந்தனையை புகுத்துகின்றனர். சிறுபான்மையினரின் உரிமைகளில் கைவைக்கின்றனர். நிர்வாக கட்டமைப்பு மற்றும் அரசியல் செயற்பாடுகளிலிருந்தும் சிறுபான்மையினரை ஓரங்கட்டவே முயற்சிக்கின்றனர்.

அதில் ஓர் அங்கமாக, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ரத்தன ஜீவன் ஹூல் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரின் சுயாதீன செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை  போட முயற்சிக்கின்றனர். அவர் ஒரு சிறுபான்மை பிரதிநிதி என்பதற்காகவே இவ்வாறு ஆளும் தரப்பினர் நடந்து கொள்கின்றனர்.

2018 ஆம் ஆண்டு ஐ.தே.க. அரசாங்கத்தை வீழ்த்த அன்றைய ஜனாதிபதியும் ராஜபக்ஷாக்களும் இணைந்து மேற்கொண்ட சதி முயற்சியின் போது ரத்ன ஜீவன் ஹூல் அரசியலமைப்பின் பிரகாரம் அதனை எதிர்த்து குரல் எழுப்பினார். இதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின்போது, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வே ஹூல் சார்பாக ஆஜராகியிருந்தார். இதனாலேயே ஹிஜாஸ் பலிவாங்கப்படுகின்றார்.

இந்நிலையில் ராஜபக்ஷாக்கள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் நிலைமை மிக மோசமடையும். எனவே, இவர்களை துறத்த வேண்டும். சிறுபான்மை மக்கள் இந்த இக்கட்டான காலத்தில் மிக ஒற்றுமையுடன் செயற்பட்டு தமது வாக்குகளை பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.