Header Ads



புத்தளம் வாழ் வடமாகாண முஸ்லிம்கள், ஒன்றாக பயணிப்பது காலத்தின் தேவை - ஆப்தின் எஹ்யா

33 வருட காலமாக புத்தளத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமையால் பிரதேசத்தில் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக பின்னோக்கி சென்றுள்ளோம். 

புத்தளத்தில் நீண்ட காலமாக வாழ்கின்ற, வட மாகாண முஸ்லிம்கள் சுமார் ஐயாயிரம் குடும்பங்கள் வாக்களிக்கத் தகுதிப்பெற்றுள்ளனர். 

இவர்கள் எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு பங்காளர்காக வேண்டும் என்பதுடன் எமது தேசியத் தலைமையில் அல்ஹாஜ் ரிசாத் பதியுத்தீன் அவர்களின் கரங்களைப் பலப்படுத்துவேன் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தின் எஹ்யா தெரிவித்தார்.

புத்தளம் பிரதேச உறுப்பினரும், புத்தளம் வாழ்  யாழ் மக்களின் பிரதிநிதி ரிபாஸ் நசீர் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆப்தின் எஹ்யா இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் தராசு சின்னத்தில் 7 ஆம் இலக்கத்தில் ஆப்தின் எஹ்யா  போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


1 comment:

Powered by Blogger.