Header Ads



எனக்கும் நல்லாட்சிக்கும் இதனால்தான் மோதல் ஆரம்பமானது - இதனை முதல்தடவையாக பகிரங்கப்படுத்துகிறேன் - மைத்திரிபால

மத்திய வங்கி மோசடியின் முக்கியசந்தேகநபரான வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளதுடன், சிங்கப்பூரில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மிகப்பெரிய நிதிமோசடியான மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அர்ஜூன மகேந்திரனை கைதுசெய்தும் நிலையில் இன்டபோல் காணப்பட்டவேளை நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து மிகுந்த செல்வாக்கு மிக்க சிலர் மகேந்திரனிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல்ரீதியிலானவை, அவரை கைதுசெய்து இலங்கைக்கு நாடு கடத்தவேண்டிய அவசியமில்லை என இன்டர்போலிற்கு அறிவித்தனர் எனவும் சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விபரங்களை மக்கள் தெரிந்திருக்கவேண்டும் என்பதற்காகவே இதனை முதல்தடவையாக பகிரங்கப்படுத்துவதாக சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல் மத்திய வங்கி விவகாரத்;தின் மூலமே ஆரம்பமானது என சிறிசேன தெரிவித்துள்ளார்

நான் அந்த மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்கவில்லை; என்றால் ,நான் மோசடியின் ஆழம்வரை சென்று அதனை அம்பலப்படுத்த முயலவில்லை என்றால் நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களுக்கும் எனக்குமிடையில் பகைமை உருவாகியிராது என சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு, சிஐடி,சட்டமா அதிபர் திணைக்களம் ஏனைய சட்ட அமுலாக்கல் பிரிவுகள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாக வைத்து இலங்கை அரசாங்கம் அறிக்கையொன்றை உருவாக்கியது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் வலுவான ஆதாரங்கள் மகேந்திரனை கைதுசெய்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு போதுமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

எனினும் நல்லாட்சியின் உயர்மட்டம் மகேந்திரனிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல்நோக்கம் கொண்டவை அவரை கைதுசெய்யவேண்டாம் என பிழையான அறிக்கையை அனுப்பியதை தொடர்ந்து அவரை கைதுசெய்வதை இன்டர்போல் நிறுத்தியது எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இருவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு முடியுமான அனைத்தையும் களவாடி கோடான கோடி மக்களின் சொத்துக்களைச் சூறையாடி அங்கும் இங்கும் ஹோட்டல்களும், மதுபானக்கடைகளும் திறந்து பலகோடி பொதுச் சொத்துக்களைப் பதுக்கிவைத்துக் கொண்டு இ்ப்போது அவன் சரியில்லை என குப்ரையும் நயவஞ்சகத்தையும் பகிரங்கப்படுத்தும் உமது வௌிப்பாடுகளுக்கு பொதுமக்களின் கோபத்தையும் விரக்தியையும் தான் நீர் சம்பாதித்துக் கொள்ளமுடியும் அதுதவிர உமக்கு கருத்துக்களை கேட்க முன்பு நீர் யார் என்பதை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். வாய் பொத்தியிருந்தால் பொதுமக்களின் கோபத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.