Header Ads



இலங்கையர்களில் அதிகமானோர் நித்திரையிலேயே, நேரத்தை செலவுசெய்வதாக ஆய்வில் கண்டுபிடிப்பு

இலங்கை மக்களில் பெருமளவானோர் நித்திரையிலேயே அதிகளவு நேரத்தை செலவுசெய்வதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம் இந்த ஆய்வை நடத்தியது.

இதில் 24 மணிநேரத்தில் தனிநபர் ஒருவர் தூக்கத்திற்காக 8 மணித்தியாலமும் 6 நிமிடங்களையும் செலவுசெய்கின்றார் என்று தெரியவந்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 8 மணித்தியாலம் 18 நிமிடங்கள் ஒருநாளுக்கு தூங்குகின்றனர். 20 வயது தொடக்கம் 54 வயது வரை உள்ளவர்கள் தினமும் 7 மணித்தியாலமும் 30 நிமிடங்கள்வரை நித்திரை செய்கின்றனர்.

இதேவேளை தொழில் செய்யும் பிரிவினர் தினமும் 7 மணித்தியாலமும் 6 நிமிடங்களும் தூக்கத்திற்காக செலவுசெய்கின்றனர்.

இதேவேளை தொடர்பாடல், விநோத சுற்றுலாக்களுக்கு அதிகளவு ஆண்களே ஈடுபாடு கொண்டுள்ளனர். பெண்களில் இதன் வீதம் 88.4 ஆகவும், ஆண்களின் வீதம் 90.6 ஆகவும் உள்ளது.

எவ்வாறாயினும் நோயற்ற வாழ்வுக்கு தினமும் 6 தொடக்கம் 8 மணிநேர தூக்கம் அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.