Header Ads



கொரோனா தடுப்பு விவகாரத்தில், அபுதாபி வைத்தியர்களின் சாதனை


- Aashiq Ahamed -

அபுதாபி ஸ்டெம் செல் ஆய்வுக்கழகம் (ADSCC), கொரோனா வைரஸ் தொடர்பில் உருவாக்கியுள்ள திருப்புமுனை சிகிச்சை தான் மருத்துவ உலகின் இன்றைய ஹாட் டாபிக். தங்கள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமையையும் பெற்றுள்ள இந்நிறுவனத்தின் ஆய்வாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கொரோனா வைரஸ் நுரையீரல் செல்களை தாக்குகிறது. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, வைரஸ்சிற்கு எதிராக வீரியமாக செயல்படும் போது காய்ச்சல் போன்ற அறிகுறிக்களை உருவாக்குகிறது. இந்த அறிகுறிகளை (வயது முதிர்ச்சி, சுவாச பிரச்சனைகள் etc போன்ற காரணங்களுக்காக) தாக்குபிடிக்க முயலாத சூழலில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அபுதபி விஞ்ஞானிகளின் மருத்துவ முறையானது, நோயாளிகளின் இரத்ததில் இருந்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்து, சுவாச உள்ளிழுத்தல் (Mist Inhalation) மூலமாக மறுபடியும் அவற்றை நோயாளிகளின் நுரையீரலுக்கு கொண்டு செல்கின்றனர். இதன் மூலமாக நுரையீரல் செல்கள் மறு உருவாக்கம் பெறுவதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தன்னுடைய வீரியமான செயல்பாட்டை குறைக்கிறது. இதனால் நோயாளிகள் விரைவில் குணமாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இம்முறையை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட 73 நோயாளிகளும் பூரண குணமடைந்துள்ள நிலையில் பக்க விளைவுகள் எதுவும் காணப்படவில்லை. இவர்கள் அனைவரும் தீவிர மற்றும் மிதமான நோய் அறிகுறிகளுக்கு ஆளாகியிருந்தனர்.

வாழ்த்துக்கள் ADSCC.

செய்திக்கான ஆதாரம்: UAE அரசு மற்றும் ADSCC வெளியிட்டுள்ள பதிவுகள் மற்றும் இது தொடர்பிலான ஊடக செய்திகள்.

No comments

Powered by Blogger.