Header Ads



ஒரு டொலரும் எமக்குக் கிடைக்கவில்லை, உலகம் நிதியுதவி தரும் என்ற நம்பிக்கையில், எமது பணத்தை செலவு செய்கின்றோம்

 (ஆர்.யசி)

இலங்கைக்கு நிவாரணமாகவும், கடனாகவும் வழங்குவதாக சர்வதேச நாடுகள் கூறிய  தொகையில் ஒரு டொலரேனும் எமக்கு கிடைக்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறுவதாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவித்தார் அமைச்சர் ரமேஷ் பத்திரன, அரசாங்கத்தின் தேவைக்காக 3000 வாகனங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் கூறினார்.

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதிகளில் இலங்கைக்கு கிடைத்த நிதித்தொகை எவ்வளவு என அமைச்சரவையில் இன்று கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைக் கூறினார், இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக உலக நாடுகள் எமக்கு வழங்கிய தொகையில் இதுவரையில் ஒரு டொலரேனும் எமக்குக் கிடைக்கவில்லை. அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரண்டு மாதங்களில் 80 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதார நிலைமைகளை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச ஊழியர்களின் கொடுப்பனவில் அறவிட அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக பொய்யாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. யார்  விரும்புகின்றார்களோ அவர்கள் சுயமாக உதவி செய்ய முடியும்.

அதேபோல் அரசாங்கதின் தேவைக்காக மூவாயிரம் வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனினும் அவ்வாறான எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்போது இருக்கும் வளங்களை பயன்படுத்தியே அரசாங்கம் இயங்க வேண்டும் என்ற கொள்கையில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். இப்போதுள்ள நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எந்தவித வாகனங்களும் வழங்கப்படாது என நாம் நம்புகின்றோம் என்றார்.

இது குறித்து அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறுகையில்,

உலக வங்கியின் மூலமாக 126 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர். அந்த நிதித்தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் எமது இருப்பில் இருந்து செலவு செய்கின்றோம். எனினும் இன்னமும் சர்வதேச நிதி உதவி எமக்குக் கிடைக்கவில்லை.

அதேபோல் சர்வதேச சந்தையில் கனிய எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதால் இலங்கையில் எண்ணெய் விலையை குறைக்க முடியாது. அது குறித்த தீர்மானம் எடுக்கும் திட்டமொன்று உள்ளது. உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தால் அதன் இலாபம் மத்திய வங்கியில் எண்ணெய் குறித்த கணக்குகளில் சேரும். இவ்வாறு நாம் 200 மில்லியன் பெற்றுக்கொள்ள நினைக்கிறோம்.

எனினும் பெற்றோலியக்கூட்டுத்தாபனம்  கடனில் உள்ள காரணத்தினால் இந்த நிதியை கடன்களை நிரப்ப பயன்படுத்வோம். எதிர்காலத்தில் இதன் பலன்களை மக்கள் அனுபவிக்க முடியும். இவ்வாறான திட்டமே எம்மிடம் உள்ளது. விலை நிர்ணயம் ஒன்றினை உறுதியாக கடைப்பிடக்க வேண்டும். அவ்வாறு கடைப்படித்தால் நெருக்கடிகள் ஏற்படும் வேலைகளிலும் மக்களுக்கு நெருகடியாகளை வழங்காது கையாள முடியும் என்றார். 

1 comment:

  1. இந்த அசை்சரின் கருத்துக்களை அவதானிக்கும் போது ஒர் உண்மை தௌிவாகத் தெரிகிறது. அதில் முக்கியமான உண்மை இவரும் அலிபபா கூட்டத்தின் ஒரு அங்கத்தவர் என்பதுடன் நாட்டின் அரச நிர்வாகம் பற்றிய எந்தவிதமான முன் அனுபவமும் முதிர்ச்சியும் இல்லாத ஒரு அலிபபா அங்கத்தவர் நான் என்பதை இவர் அவருடைய வார்த்தைகளில் கூறிவிட்டார். அதாவது இதுவரை உலகவங்கி உற்பட நிதிநிறுவனங்களும் நாடுகளும் வாக்குறுதியளித்த கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் எதுவும் இன்னமும் வந்து சேரவில்லை. இது சிலவேளை உண்மையாக இருக்கலாம். ஏனெனில் சர்வதேச நிதிநிறுவனங்களுக்கும் மேற்கத்தைய நாடுகளுக்கும் இந்த அரசாங்கத்தின் பிரதானிகள் பற்றிய ஒரு உண்மை நிதர்சனமாகத் தெரியும். அதாவது உதவிகள் பணமாக நாட்டுக்கு வந்து சேர்ந்தால் அவை முதலில் அலிபபாக்ககளின் பக்கட்டுகளுக்குத்தான் போய்ச் சேரும், எனவே, உதவிகள் பணமாக அன்றி பல்வேறு சேவைகளை சிறப்பாக மேற்கொள்ள யூஎஸ் எய்ட் போன்ற நிறுவனங்களுக்கு அவை அனுப்பப்படும். அவர்கள் அந்த நாடுகளின் நோக்கத்தை அடையும் வகையில் அந்த சேவைகளைச் சரியாக வழங்கும். ஒருபோதும் நிதி உதவிகள் அரச நிறுவனங்களைச் சென்றடையாது. இது அந்த நாடுகள், இந்த அலிபபாக்கூட்டம் பற்றி நன்றாக அறிந்து வைத்துள்ளன. இந்த இரகசியம் புதிய அலிபபாக்களுக்குத் தெரியாது. எனவேதான் பணக்கட்டுகள் விமானம் மூலமாக கட்டுக்கட்டாக வந்து சேர அவை பெரிய அலிபபாக்களுக்குப் போக எஞ்சியவை மற்ற அலிபபாக்களுக்கு கிடைக்கும் என்ற கற்பனை உலகில் இந்த அலிபபாக்கள் சஞ்சரிக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.