Header Ads



பாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு  கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical Laboratory Science என அழைக்கப்படும் இலங்கை மருத்துவ ஆய்வக விஞ்ஞான சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் இன்று (07) வியாழக்கிழமை அறிவித்தார்.

https://www.youtube.com/watch?feature=youtu.be&v=kGXQo_M5-gg&app=desktop

மட்டக்குளி பிரதேசத்தினைச் சேர்ந்த 52 வயதான பாத்திமா றினோசா கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தாக தெரிவித்து அவரது ஜனாஸா தகனம் செய்யப்பட்டது.

இதன்போது அவரது மகன் ஒருவர் மாத்திரம் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் குறித்த பெண்மனிக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாமல், கடந்த புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட ராஜகிரிய – பண்டராநாயக்கபுர, கொலன்னாவ மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்றவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வுகூடம் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு இலங்கை மருத்துவ ஆய்வக விஞ்ஞான சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ், சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இன்று கடிதமொன்றினை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



4 comments:

  1. ஜமால் நாநா விடயமும் இதுதான். பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனை வீண் போகாது. சாபம் உண்டாகட்டும்..

    ReplyDelete
  2. All r one gange, what is the benefit to send any useless paper to him. We must concern the real judgement

    ReplyDelete
  3. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தான்
    DR ஷாபி விவகாரத்தை திரித்து முகநூலில் பதிவிட்டு பெரிதாக்கிவிட்டு பின் பதிவை நீக்கிவிட்டார்

    ReplyDelete
  4. அநீதி இழைக்கப்பட்டவர்களே! அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள். உங்களது துஆவுக்கும் அல்லாஹ்வுக்குமிடையே எந்தத் திரையுமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.