Header Ads



புகையிரதத்தில் பயணிக்க, இருப்பவர்களின் கவனத்திற்கு..

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கிய பணியாளர்களின் பெயர்களின் பட்டியலுக்கமைய ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள குறுந்தகவலில் உள்ளவர்கள் மாத்திரமே ரயிலில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே கட்டுப்பாட்டாளர் திலந்த பெர்ணான்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் 11ஆம் திகதி நாட்டு மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்கக்ப்படுகின்றது.

அத்தியாவசிய அலுவலக கடமைகளைத் தொடங்கும் போது ஊழியர்களின் போக்குவரத்தினை எளிதாக்குவதற்கு தேவையான வகையில் அலுவலக ரயில்களை பயன்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பத்து முக்கியமான ஆலோசனை குறிப்புகள் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், இதற்கு இணங்காத பயணிகள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க பொலிஸார், இராணுவம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைகள் எச்சரிக்கையுடன் இருப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர் திலந்த பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

ரயில் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்,
பயணிகளுக்கு இடையில் ஒரு மீட்டர் தூரத்தை கடைபிடித்தல்,
ரயில் நிலையத்தில் கைகளை கழுவுதல்,
கிருமிநாசினி தெளித்தல்,
ரயில் நிலையத்திற்கு சீக்கிரம் வந்து சேருதல்,
ரயிலில் பயணிப்பதற்கு குறுந்தகவல் பெற்றிருத்தல்,
கூட்டாக ஒன்றுகூடுவதை தவிர்த்தல்,
எச்சில் துப்புதல் மற்றும் குப்பை போடுதலை தவிர்த்தல்,
பொது கழிப்பறைகள் பயன்படுத்தவதனை முடிந்தளவு தவிர்த்தல்,
ஒதுக்கப்பட்ட இடங்களில் மாத்திரமே பயணித்தல்,

போன்ற அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதென ரயில்வே கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.