Header Ads



கொரோனா தொற்றில்லாதவர்களுக்கு ஏன் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இறுதி கிரியைகள் செய்யப்பட்டது?

அண்மையில் உயிரிழந்த சிலரது இறுதி கிரியைகள் ஏன் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து அரசாங்கம் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கடந்த சில நாட்களாக உயிரிழந்த சிலருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டிருந்தது. எனினும், அவர்களது இறுதி கிரியைகள் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏன் அவ்வாறு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இறுதி கிரியைகள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து அரசாங்கம் விளக்கம் ஒன்றை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் காரணமாக பேருந்துகளில் சுமார் 25 நபர்களை மாத்திரம் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்படுகின்றது.

இதனால் போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்கள் இலாபம் ஈட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவது நியாயமற்றது.

ஆகையினால் அரசாங்கம் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.