Header Ads



புத்தளத்தில் கத்தோலிக்க தேவாலய சிலைகள் உடைப்பு - தீவிர விசாரணையில் பொலிஸார்

புத்தளத்திலுள்ள தேவாலங்களின் முன்னால் உள்ள திருச்சொருபங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புத்தளம் தூய மரியா தேவாலயத்திற்கு முன்னால் உள்ள சிலையின் கண்ணாடி பெட்டியும், பாலாவிலுள்ள சிலையின் கண்ணாடி பெட்டியும் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் புத்தளத்தை சேர்ந்த மதகுரு ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்ற விசாரணை பொலிஸார் மற்றும் பொலிஸ் நாய்களுடன் இணைந்து தற்போது வரையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் நாசகார செயற்பாடுகள் உள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

2

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மற்றும் பாலாவி ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களின் மாதா சிலைகள் மீது இனந்தெரியாத சிலர் கற்களை வீசி சேதப்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இதனால் மாதா சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிக் கூண்டுப் பகுதி சேதமடைந்துள்ளதாக,  புத்தளம் பொலிஸார் தெலிவித்தனர்.


இந்த சம்பவம் நேற்று முன்தினம் (18) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.