Header Ads



ரஷ்ய பிரதமருக்கும் கொரோனா

தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொள்வதாக, ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஸ்சுஸ்டின் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. 

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து சில நாள்கள் வீட்டில் தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர் அறிவித்தார்.

இருப்பினும், அவரது உடல்நிலை சற்று மோசமடைந்ததையடுத்து, போரிஸ் ஜான்சன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

ஒரு வாரத்துக்கும் மேலான சிகிச்சைக்கு பிறகு அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) வீடு திரும்பினார்.

இந்த நிலையில் தற்போது, ரஷ்ய பிரதமர் மிக்கல் மிஸ்சுஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, வீட்டில் தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். 

தமது அமைச்சரவை சகாக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.