Header Ads



அரச மருத்துவர்களின் ஓய்வு வயதினை 61 ஆக, அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானம்

தற்போது சேவையில் உள்ள அரச மருத்துவர்களின் ஓய்வு வயதினை 60யில் இருந்து 61 ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

சேவை அவசியம் கருதி சிலரின் ஓய்வு பெறும் வயதினை 61 வரை உயர்த்துவதற்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரன இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை அரச மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதினை 61 அக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவர்களின் பற்றாக்குறையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.