Header Ads



இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை பரப்பி திரிவோர், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்

அண்மைக் காலமாக பெரும்பான்மை கட்சியொன்றின் முஸ்லிம் ஆதரவாளர்கள் சிலர், ஜப்னா முஸ்லிம் பேஸ்புக் பக்கத்தில் வந்ததாக இட்டுக்கட்டப்ட்ட போலிச் செய்திகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.

சஜித் பிரேமதாஸா, றிசாத் பதியுதீன், அதாவுல்லா, முஜீபுர் ரஹ்மான், ஆசாத் சாலி ஆகியோர் வரிசையில் தற்போது ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டதாக மற்றுமொரு வதந்தி பரவச் செய்யப்படுகிறது.

'அத்துரலியே ரத்தன தேரருக்கு சஜித் பிரேமதாசா தேசியப்பட்டியல் வழங்குவதை நமது சமூகம் பெரிதுபடுத்த தேவையில்லை - ஹக்கீம்'

என்ற செய்தியே தற்போது பரவச் செய்யப்படுகிறது.

எனினும் ஜப்னா முஸ்லிம் இணையம் மிக உறுதியாகவும், திட்டவட்டமாகவும் தெரிவித்துக்கொள்ள விரும்புவது யாதெனில் இவ்வாறான செய்தியை நாங்கள் எமது இணையத்தில் பதிவேற்ற இல்லை. அப்படி சஜித்தோ அல்லது ஹக்கீமோ தெரிவிக்கவும் இல்லை.

வாசகர்களாகிய அல்லது அரசியல்வாதிகளாகிய நீங்கள் போலிச் செய்திகள் என ஊகித்தால் உடனடியாக  ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நேரடியாக வந்து பாருங்கள். அப்படி அந்தச் செய்தி காணப்படாவிட்டால் அது பொய்.

ஜப்னா முஸ்லிம் பேஸ்புக் பக்கத்தை போன்று போலியாக தயாரித்து, கயவர்கள் பரப்பும் போலிச் செய்தி என புரிந்து கொள்ளுங்கள்.

இந்த புனிதமான ரமழான் காலத்தில், குழப்பத்தை ஏற்படுத்தி திரிவோர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்.

இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் இலங்கை முஸ்லிம்களினால், மிக அதிகளவில் வாசிக்கப்படும் முஸ்லிம் சார்பு இiணையத்தளமென்ற வகையில் இந்தத் தெளிவை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

No comments

Powered by Blogger.