Header Ads



கொரோனா அச்சுறுத்தல் இலங்கையிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக, சில ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானது


(எம்.மனோசித்ரா)

கொவிட்-19 வைரஸ் தொற்று சமூகமயமாவதிலிருந்து கட்டுப்படுத்தி விட்டோமே  தவிர முழுமையாக அழித்து விட வில்லை. சில தவறான செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன.

எனவே தொடர்ந்தும் கட்டுப்பாடுகளுடனான தளர்வுகளே முன்னெடுக்கப்படும். சுகாதார பிரிவுகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் தொடர்ந்தும் தீவிர கண்காணிப்புகளில் இருப்பார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து இன்று -18- ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துகையிலேயே அணில் ஜாசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அவர் தொடர்ந்தும் கூறுகையில் , 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இலங்கையிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக சில ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானதாகும்.

அவ்வாறானதொரு சுகாதார பாதுகாப்பான சூழல் நாட்டில் இன்னும் ஏற்பட வில்லை. குறித்த வைரஸ் ஆனது சமூகமயமாதலை கட்டுப்படுத்தியுள்ளோம். இதற்காக அச்சுறுத்தல் இல்லை அல்லது குறைந்து விட்டது என்று அர்த்தம் அல்ல.

குறிப்பாக கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்ட நாள் முதல் இன்று வரை பல்வேறு நடவடிக்கைகளை பரந்தளவில் முன்னெடுத்திருந்தோம் . அதன் ஊடாகவே வைரஸ் தொற்று தீவிரமாக பரவுவதிலிருந்து பாதுகாக்க முடிந்தது. 

எனவே நாட்டில் தற்போது சுகாதார தரப்பினரும் பாதுகாப்பு துறையினரும் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்தும். முன்னெடுக்கப்படும்.

ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட ஏனைய கட்டுப்பாடுகளில் தளர்வு நிலை ஏற்படுத்தினாலும் கூட கொரோனா ஒழிப்பு திட்டம் மற்றும் கண்காணிப்பும் ஏற்கனவே இருந்ததை போன்று முன்னெடுக்கப்படும். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தியுள்ளோமே தவிர முற்றாக அழித்து விட வில்லை. இன்னும் சிறு காலம் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.