April 03, 2020

ச‌மூக‌ம் சில‌, ப‌டிப்பினைக‌ளை பெற‌ வேண்டும்

கோரானாவால் ம‌ர‌ணித்த‌ ஜ‌னாஸாவை அட‌க்க‌ம் செய்ய‌  அனும‌திக்க‌ வேண்டும் என்ற‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ரின் கோரிக்கையை பிர‌த‌ம‌ரும் அர‌சும் முற்றாக‌ நிராக‌ரித்துள்ள‌மை மூல‌ம் ச‌மூக‌ம் சில‌ ப‌டிப்பினைக‌ளை பெற‌ வேண்டும்.

முஸ்லிம்க‌ளின் குர‌லுக்கான‌ வெற்றிட‌ம் இருப்ப‌தை காட்டியே முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சி உருவாகி பெரும்பாலான‌ முஸ்லிம்க‌ள் அக்க‌ட்சிக்கு வாக்க‌ளித்து அத‌னை ப‌ல‌ப்ப‌டுத்தின‌ர். 

த‌லைவ‌ர் அஷ்ர‌ப் கால‌த்தில் அக்க‌ட்சி முஸ்லிம்க‌ளின் உரிமைக‌ளை பெற்றுத்த‌ராத‌ போதும் ச‌மூக‌த்தின் ப‌ல‌ தேவைக‌ளை பெற்றுக்கொடுத்த‌து என்ப‌து உண்மை. அவ‌ர‌து ம‌றைவுக்குப்பின் ஹ‌க்கீம் த‌லைமையிலான‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் ஒரு சில‌ரின் தேவைக்காக‌ முஸ்லிம் ச‌மூக‌த்தின் வாக்குக‌ளை விற்கும் க‌ட்சி என்ப‌து அறிய‌ப்ப‌ட்ட விட‌ய‌ம்.

த‌ற்போதைய‌ ஆட்சியில் முஸ்லிம் காங்கிர‌ஸ் எதிர்க்க‌ட்சியாக‌ உள்ள‌து. ஜ‌ன‌நாய‌க‌த்தை பொறுத்த‌ வரை எதிர்க்க‌ட்சி ஒன்று சொல்லும் விட‌ய‌த்துக்கு அர‌சு காது கொடுத்து கேட்குமே த‌விர‌ அத‌னை செய‌ற்ப‌டுத்த‌ வேண்டும் என்ற‌ க‌ட‌ப்பாடு அர‌சுக்கு இல்லை. 

இம்றைய‌ பாராளும‌ன்ற‌ம் க‌லைக்க‌ப்ப‌ட்ட‌ போதும், திடீரென‌ பாராளும‌ன்ற‌ம் மீண்டும் கூட்ட‌ப்ப‌ட்டாலும் அர‌சுக்கு ஆத‌ர‌வான‌ முஸ்லிம் க‌ட்சி எதுவும் அர‌சில் இல்லை என்ப‌தை நாம் புரிய‌ வேண்டும்.

1989ம் ஆண்டு முத‌ல் 94 வ‌ரை அஷ்ர‌ப் எதிர்க்க‌ட்சியாக‌ செய‌ற்ப‌ட்டும் ச‌மூக‌த்தின் தேவைக‌ளை நிறைவேற்ற‌ முடியாது என‌ க‌ண்ட‌மையால்த்தான் அர‌ச‌ ஆத‌ர‌வு க‌ட்சியாக‌ மாறினார். அவ‌ருடைய‌ 6 வ‌ருட‌ ஆட்சியில் அங்கும் இங்கும் தாவுகின்ற‌ ஒருவ‌ராக‌ இருக்க‌வில்லை என்ப‌து மாற்று ச‌மூக‌த்திட‌மும் இருக்கும் ம‌ரியாதையாகும்.

ஆனால் ஹ‌க்கீம் த‌லைமையிலான‌ க‌ட்சி என்ப‌து தேர்த‌லில் ஒரு க‌ட்சியை ஆத‌ரிப்ப‌து தேர்த‌லில் த‌ன் த‌ர‌ப்பு  தோற்ற‌தும் வென்ற‌ த‌ர‌ப்பில் போய் ஒட்டிக்கொள்வ‌து என்ற‌ கொள்கை கொண்ட‌தாகும். இந்த‌ கார‌ண‌த்தால் முஸ்லிம் காங்கிர‌சுக்கு இன்றைய‌ ஆட்சியாள‌ரிட‌ம் நாய்க்கு இருக்கும் ம‌திப்பு கூட‌ இல்லை என்ற‌ ய‌தார்த்த‌த்தை நாம் புரிந்து கொள்ள‌ வேண்டும்.

முஸ்லிம் காங்கிர‌சின் கோரிக்கையை ஏற்று முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு உத‌வினாலும் அக்க‌ட்சி அத‌னை ப‌ய‌ன் ப‌டுத்தி முஸ்லிம்க‌ளின் வாக்குக‌ளை பெற்று அவ‌ற்றை எதிர்க்க‌ட்சிக்கு கொடுக்குமே த‌விர இத‌ற்காக‌ முஸ்லிம் ச‌மூக‌ம் பிர‌த‌ம‌ரையும் அர‌சையும் பாராட்டி அர‌ச‌ சார்புக்கு முஸ்லிம்க‌ளின் ஓட்டுக்க‌ள் கிடைக்க‌ வ‌ழி செய்ய‌ மாட்ட‌து என்ப‌தை அர‌சு புரியாம‌ல் இருக்குமா? 

இந்த‌ அர‌சிய‌ல் ய‌தார்த்த‌த்தை புரியாம‌ல் ச‌மூக‌ம் வீணே புல‌ம்புவ‌தில் எந்த‌ அர்த்த‌மும் இல்லை.

ஆக‌ குறைந்த‌து முஸ்லிம் ஜ‌னாஸா ச‌ம்ப‌ந்த‌மாக‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் அர‌சில் உள்ள‌ சிறிய‌ சிங்க‌ள‌ க‌ட்சிக‌ளான‌ வாசுதேவ‌, திஸ்ஸ‌ விதார‌ண‌ போன்ற‌வ‌ர்க‌ளை அணுகி அவ‌ர்க‌ள் மூல‌ம் இத‌னை அர‌சின் க‌வ‌ன‌த்துக்கு கொண்டு போயிருந்தால் ஓர‌ள‌வு சாத‌க‌ம் கிடைத்திருக்க‌லாம்.

எது எப்ப‌டியும் முஸ்லிம் காங்கிர‌ஸ் ஒரு செல்வாக்க‌ற்ற‌ க‌ட்சியாக‌ ஆகிவிட்ட‌து என்ப‌தே உண்மை. இனியும் அக்க‌ட்சியின‌ருக்கு முஸ்லிம்க‌ள் ஓட்டு போடுவ‌து என்ப‌து ச‌மூக‌ம் த‌ன் த‌லையில் தானே ம‌ண்ணை அள்ளிப்போடுவ‌தாகும்.

ஒரு ச‌மூக‌ம் த‌ன்னை தானே திருத்திக்கொள்ள‌ முய‌லாத‌ வ‌ரை இறைவனும் அச்ச‌மூக‌த்தை திருத்த‌ மாட்டான்.

- முபாற‌க் மௌல‌வி க‌பூரி, ம‌த‌னி
3.4.2020

17 கருத்துரைகள்:

YOUR ARE VERY INFLUENTIAL IN THE PRESENT GOVERNMENT PERSON MORE THAN RAUF HAKEEM Dr Mubarak mowlavi

ஒரு கொரோனா நோயாளியை இவனுக்கு முன்னால்விட்டு இவனுக்கு அந்த கிருமியை கடத்தவேண்டும் அப்போதுதான் இவன் சரியாக சிந்திக்க முயற்சிப்பான்!

நீங்கள் என்னய்யா இந்த விடயத்தில் முயற்சி செய்தீர்கள் சங்கிகள் போல சமூகத்தை காட்டிக்கொடூக்காதே

நீங்களும் தற்போதைய அரசுக்கு ஆதரவு தருவோரும் கேட்டுப்பார்த்து விட்டுத்தான் இந்த முடிவிற்கு வந்திருக்க வேண்டும். அதுதான் நியாயம் என எனக்குத் தோன்றுகிறது.

நான் ஹகீமின் அரசியல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துடையவன். இற்றைவரைக்கும் SLFP யை தவிர எந்த கட்சிக்குமே வாக்களிக்காதவன் என்னை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.நீங்க ஒன்றை தெளிந்து கொள்ளுங்கள் ஹகீம் ஒன்றும் அமைச்சு பதவியயோ அல்லது வேறு எதையுமையோ அவரிடம் கேட்டு போகவில்லையே. இது எங்களது உரிமை. வாக்களித்தவர்களுக்கு மாத்திரம் தான் அவர் பிரதமர் என்றால் மற்றவர்களுக்கு யார் பிரதமர். இலங்கை யாருடைய சொத்தும் கிடையாது. யாரும் தனது தனிப்பட்ட சொத்துக்கைளக்கொண்டு வந்து சேவைகைள செய்யவுமில்லை. அரசியல் வாதிகைள மக்கள் பாதையில துரத்தி துரத்தி அடிக்கும் காலம் மிக தொலைவில் இல்லை. தயவு செய்து ஒவ்வொரு வரும் தனிப்பட்ட அரசியல் இலாபம் தேடாமல் நமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படங்கள். யா ரஹ்மானே ஆட்சியாளர்களை நீதமாக ஆட்சி செய்யக்கூடிய மனதினை கொடுப்பாயாக.

சரி ரவுப் ஹகீம் தான் எதிர்க் கட்சி ஆதரவாளர்.நீங்கள் அதவுல்லஹ் போன்றோர் பாராளுமன்றில் இல்லாவிட்டாலும் அரச ஆதரவாளர்களே.அவர்களுக்கே பிரச்சாரம் செய்தீர்கள்.உங்களால் அதை அடக்கம் செய்வதற்கான முற்சியை செய்து கொடுத்திருக்க முடியாதா?நீங்கள் உலமா என்றாலும் உங்களுக்கு எங்கே மார்க்கப் பற்று?

Ongalukku manasatchi illaya

Ongalukku manasatchi illaya

சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் சமயத்திலும் நீர் சுயலாப அரசியல் செய்வதை அவதானிக்க முடிகிறது.

முதலில் நீர் புரிந்துகொல்,ஜனாசா அடக்கம் செய்வதற்கும்,கட்சிகலுக்கு ஓட்டு போடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஜனாசா கடமை எமது மார்க்க கடமை இதற்கும் அரசியல்,வாக்குகள் எனும் சொற்களை பயன்படுத்தும் நீர் எவ்வளவு பெரிய முட்டாள்.

Enda monkey always writing ulama katchi. Today not putting. Seththu pooo

Don't play dirty politics at this point.

நீங்கள் எதை சாதித் தீர்கள்

இதை வைத்து முபாரக் அரசியல் காய்நகர்தல்
செய்ய முயற்சி செய்கிறார் மொட்டை தலைக்கு ம் முழங்காலுக்கு மிடையே முடிச்சுப்போடமுனைகிறார்

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்,ரவூப் ஹக்கீம்,ரிஷாத் பதூர்தீன், முஜீபுர்ரஹ்மான்,அஷாத்ஷாலி,ஹாரீஸ்,மரைக்கார்.இவர்கள் எல்லோரும் இன்றைய காலத்தின் மட்டுமல்லாது எல்லா நேரத்திலும் முஸ்லீம்களின் குரலாக செயல்படுகின்றார்கள்.அற்பம் பணத்துக்காக சதாம்ஹுசைன்,கடாபி,பில்லாடின் போன்றவர்களை காட்டி கொடுத்த பெயர் பட்டியலில் நீங்களும் சேரவேண்டாம்!சும்மா இந்த உலகின் அற்பம் வாழ்வுக்காக மவுத்தா போன மர்ஹும் அஷ்ரப் அவர்களின் பெயரை சொல்லி அரசியல் செய்வதையும் நிருத்துங்கள்!அற்ப மணிதனை அல்லாஹ்வின் இடத்தில் வைத்து இணை வைப்பதையும் நிறுத்துங்கள்!இந்த உம்மத்தில் சிறந்தா மாமனிதர் என்றாள் அது முகம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டும்தான்.

You are talking about Hakeem. Whatever said he tried as a leader. But What did you do?This is not matter concerning politics. Why you did not come forward to do some thing. What about your Ali-Sabry PC. You called him the leader of Muslim.we don't want to blame any one.Find a remedy.At last your leader Mahinda refused to comply. It is your leader PM Mahinda who cremated 2 Muslim Janaza. Not Rauf Hakeem. Insted of blaming Mahinda you try to blame Hakim and save Mahinda. You people supported Mahinda and same YOUR Mahinda burned the Muslim Janaza.Shame On you.

what happened to my comment.

Post a Comment