Header Ads



மதவெறி வைரஸை மாய்ப்போம்

- டாக்டர் கலீல் -

கொரோனா பெருவாரியான மக்கள் மத்தியில் பரவுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பது இன்று பரப்பப்படுகிற மிகப்பெரும் அவதூறு.

வரலாறு நெடுக இவ்வாறு பெருந்தொற்று ஏற்பட்ட காலங்களில் எல்லாம் அடித்தட்டு மக்கள், ஏழைகள், சிறுபான்மையினர் போன்றோர் மீது பழி சுமத்தப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

முன் காலங்களில் தோன்றிய காலரா பெருந்தொற்றுக்கு இந்தியர்கள் மீதும் பழி சுமத்தப்பட்டு பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள். ஐரோப்பாவில் தோன்றிய பிளேக்கு பெருந்தொற்றுக்கு சிறுபான்மை யூதர்கள் மீது பழி சுமத்தப்பட்டு அவர்கள் பெருங்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
இன்றைய இந்தியாவில் முஸ்லிம் வெறுப்பு என்பது சங்க பரிவாரங்களால் நீண்டகாலமாக உரமிட்டு வளர்க்கப்பட்ட கருத்தியல்.

இவர்களுடைய வெறுப்பு பரப்புரையை பெரும்பாலான இந்தியர்கள் ஏற்பதில்லை. இவர்கள் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் இந்தச் சூழலில் கிடைத்த வரப்பிரசாதம்தான் டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாடு. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மதவெறுப்பு இல்லாமல் இருந்த இந்திய மக்களிடத்தும் வெறுப்பு விதையை விதைக்கிறார்கள்.

இந்த சூழ்ச்சி புதியதல்ல.

இது போன்ற ஒரு பிரச்சினை இஸ்லாமிய வரலாற்றின் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டின் ரஜப் மாத இறுதியில் தவறுதலாக நடந்த நிகழ்வில் தோற்றுவிக்கப்பட்டது.

இறைமார்க்கத்தை ஏற்று இறைவனுக்கு அடிபணிந்த வாழ்வை மேற்கொண்டதற்காக கொடுமைக்கும் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார்கள். அந்த அகதிகளுக்கு தஞ்சம் தந்தது மதீனா.

இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) புலம்பெயர்ந்து மதினாவில் தஞ்சமடைந்ததிலிருந்துதான் ஹிஜ்ரி ஆண்டு கணக்கிடப்படுகிறது. முஸ்லிம்கள் தங்கள் அசையா சொத்துகள் அசையும் சொத்துகள் செல்வங்கள் என்று அத்தனையையும் மக்காவிலிலேயே விட்டுவிட்டு வந்தார்கள்.

மக்காவில் அவர்கள் விட்டுவிட்டு வந்த அனைத்தையும் மக்கத்து எதிரிகள் ஆக்கிரமித்து அபகரித்துக் கொண்டார்கள்.

அதுமட்டுமின்றி மதீனாவில் தஞ்சமடைந்தவர்களையும் நிம்மதியாக வாழ விடவில்லை. அவ்வப்போது அவர்களது கால்நடைகளை கவர்ந்து வருதல் அவர்களது உயிர் உடைமைகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற போர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார்கள்.

ஆதலால் எதிரிகளின் நடமாட்டத்தை உளவறிவதற்காக ஒரு சிறு குழுவை நக்லா என்ற இடத்திற்கு இறைதூதர் அனுப்பி வைக்கிறார்கள்.

போர்தடை செய்யப்பட்ட மாதமாக அரபுகள் தொன்றுதொட்டு கருதி வந்த ரஜப் மாதத்தின் இறுதிநாளான 29ஆம் நாள் அது. புதுப்பிறை கண்டால் அடுத்த மாதமான ஷஅபான் மாதம் தொடங்கி விடும். அப்போது எதிரிகளின் குழு சரக்குகளோடு அங்கே வர இது போன்று மற்றுமொரு சந்தர்ப்பம் கிட்டாது என்று கருதிய முஸ்லிம்களின் குழு எதிரிகளை தாக்கிவிட்டது.

இதுவரை எதிரிகளுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக மக்கள் முன் வைக்க கிடைத்திராத விடயம் கிடைத்துவிட்டது. வெறுப்புப் பரப்புரையைத் தொடங்கி விட்டார்கள்.

இத்தனைக்கும் இறைத்தூதரும் மதீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களும் போர் தடைசெய்யப்பட்ட மாதம் முடிவுற்றது தெளிவாகும் முன்னர் தாக்குதல் நடத்தியதை மிகக் கடுமையாக கண்டித்தார்கள். உளவு பார்க்கத்தானே அனுப்பினேன் ஏன் போர் செய்தீர்கள் என்று அவர்கள் மீது இறைத்தூதர்(ஸல்) கோபங்கொண்டார்கள். அவர்கள் போரில் கைப்பற்றிய பொருட்களையும் அரசு கருவூலத்திற்கு ஏற்கவில்லை.

இருந்த போதிலும் முஸ்லிம்கள் போர் தடைசெய்யப்பட்ட புனித மாதத்தில் போர் செய்து பெரும் குற்றமிழைத்து விட்டார்கள் என்ற பரப்புரை மிக்க வீரியத்துடன் அரபுலகம் முழுவதும் முடுக்கி விட பட்டது. நடுநிலையாய் இருந்த அரபு மக்களிடத்தும் முஸ்லிம்கள் மீது வெறுப்பு ஏற்படச் செய்தனர்.
அதனைப்போலவே இன்று கொரொனா பெருந்தொற்று விஷயத்திலும் சங்கிகள் முஸ்லிம்கள் மீது வெறுப்புப் பரப்புரையை முடுக்கிவிட்டுள்ளார்கள். அதனை நம்பி பொது மக்கள் ஏமாந்து கொண்டுள்ளார்கள். கொரொனாவால் நம் நாட்டுக்கு நெருக்கடி இல்லை என இந்திய அரசு சொல்லிக் கொண்டு இருந்த மார்ச் பதின்மூன்றாம் தேதியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லிம்கள்தான் இந்த பெருந்தொற்று பரவக் காரணம் என அவதூறு பரப்புரை செய்து அவர்களை பலிகடா ஆக்குகின்றனர்.

பொது சுகாதாரத்திற்கு பங்கம் விளையும் விதத்தில் நடப்பது பெரும் பிழைதான். ஆனால் மக்களிடையே நிலவும் இணக்கத்தை குலைத்து பிணக்கம் ஏற்படுத்துதலும் கலகமும் குழப்பமும் விளைவித்தலும் அதனினும் கொடியது. இந்தப் பேரண்டத்தைப் படைத்து மனிதர்களையும் படைத்து இந்தப் பூமியை அவன் வாழத் தகுந்த இடமாக்கி நிர்வகித்துக் கொண்டிருக்கும் இறைவனை வணங்கி அவன் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்பவர்களை கண்டால் சங்கிகளுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இறைவனை வணங்கும் வழிபாட்டுத் தலங்களை தகர்க்கிறார்கள் அபகரிக்கிறார்கள். வசிப்பிடங்களில் இருந்து மக்களை விரட்டி அடிக்கிறார்கள். வீடுகளைக் கொளுத்துகிறார்கள். இச்செயல்களெல்லாம் மிகமிக கொடுமையான செயல்களாகும். பொதுமக்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த வெறுப்பு பரப்புரையை எதிர்கொள்வது எப்படி?

தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய்யுங்கள். நன்நடத்தையை வெளிப்படுத்துங்கள். இறைவனுக்கு கீழ்படிந்த உங்கள் கண்ணியமான நடத்தையாலும் பண்பாட்டாலும் பொது சமூகம் உங்களை அடையாளம் கண்டு கொள்ளும். வெறுப்பு வியாபாரிகளாய்ப் பேயாட்டம் போடும் பாசிச வகுப்பு வாதிகளை ஒதுக்கி தள்ளும். பாசிஸ்டுகளும் நாளடைவில் மக்களிடையே செல்லாக் காசாகி கண்ணியம் இழந்து போவார்கள்.

இப்போது கீழ்காணும் இறைவசனத்தை படித்துப் பாருங்கள்.

‘தடை செய்யப்பட்ட மாதத்தில் போர் செய்வது பற்றி உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறுவீராக: “அதில் போர் செய்வது மிகக் கொடியதுதான்! ஆனால் அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் மக்களைத் தடுப்பது, இன்னும் அவனுக்கு மாறு செய்வது, மேலும் மஸ்ஜிதுல் ஹராமுக்கு வர விடாமல் (இறையடியாரைத்) தடுப்பது மற்றும் அங்கு வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது ஆகியவை அல்லாஹ்வினிடத்தில் அதைவிடக் கொடியனவாகும்.”

மேலும், ஃபித்னா (குழப்பம்) செய்வது கொலையைவிடக் கொடியதாகும். அவர்களுக்குச் சாத்தியமானால் உங்கள் தீனை (நெறியை) விட்டு உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் அவர்கள் போர் செய்து கொண்டே இருப்பார்கள். (ஆனால் நீங்கள் நன்கு புரிந்து கொள்ளுங்கள்.)
உங்களில் யாரேனும் தமது தீனை விட்டு மாறி, குஃப்ரின் இறைநிராகரிப்பின் நிலையிலேயே மரணித்துவிட்டால், இம்மையிலும் மறுமையிலும் அவனுடைய நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும். மேலும் அத்தகையோர் அனைவரும் நரகவாசிகளேயாவர்! அதில் அவர்கள் என்றென்றும் விழுந்துகிடப்பார்கள். (இறைமறை குர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 217)

எதிரிகள் எவ்வளவுதான் உங்களை வழிபிறழச் செய்ய முயன்றாலும் இறைவழிகாட்டலின் அடிப்படைகளில் சற்றும் நிலைகுலையாமல் உறுதியோடு நிலைத்திருப்போம். இறை வழிகாட்டலின் படி வாழ இடைவிடாது முயல்வோம். அத்தகைய வாழ்க்கை முறை ஏற்பட உங்கள் உடல் பொருள் ஆவி ஆற்றல் அனைத்தையும் கொண்டு அதிக பட்ச முயற்சியில் ஈடுபடுவோம். எத்தனை தடைகள் வந்த போதிலும் உங்களிடமுள்ள வளங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து திட்டமிட்டு அந்த தடைகளை தகர்த்தெறிந்து இறைவாக்கை மேலோங்கச் செய்யப் போராடுவோம். இன்ஷா அல்லாஹ்.\\

2 comments:

  1. Salaams,
    Dear Brother Dr. Kaleel,
    THIS COMMENT MAY DISTURB MANY OF THE MUSLIM READERS, BUT THE MUSLIMS SHOULD BE BOLD TO FACE REALITY, Insha Allah.
    Alhamdulillah, Muslims know the history of our religion and today digital communication has made it possible for us Muslims to learn and be reminded of all what you have expressed, in this worldly busy "world" where Muslims do not have time even to sit recite some import verse of the Holy Quran and ask for "DUA" from God AllMighty Allah after their 5 times prayers in Mosques or the Friday prayers, Tharaaviya or Festive prayers. I fully support your narative content explaining many import matters of Islamic History, but the REALITY in Sri Lanka is what we have to face "NOW", Insha Allah.
    Quote:
    "கொரோனா பெருவாரியான மக்கள் மத்தியில் பரவுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பது இன்று பரப்பப்படுகிற மிகப்பெரும் அவதூறு" unquote:
    .AGREED.
    What I am going to state below is "ONLY" focused on your above statement please.
    But look at the "REALITY" please. I am attaching a comment posted by a non-muslim in response to Dr. Amir Ali's article on the https://www.colombotelegraph.com/index.php/vote-worthy-cremation-of-dead-muslims/ 15.04.2020.
    The comment:
    Quote:
    "If you Muslims want to Bury your dead please ask them to come forward when they show the slightest symptoms of COVID19 instead of hiding, unquote. You as a writer must get your facts straight before making your conclusion as quoted above.
    Look at the events of happenings over the last months/weeks and see how the Muslims in a village in Bandaragama hid from the authorities and were the cause for spreading it in that area. Also have you read about the Muslims who evaded the authorities in a village in Kandy, the Muslims who evaded and chased away the PHI in Beruwala in which two village are shut down and also the Muslim businessman from Mt. Lavinia who returned from overseas, evaded the authorities and was discovered only after he had transmitted the diseases…", the mosque incident in Horawapathana are some of the examples we should be ashamed about ourselves. These have led to the "shutting down" of prominet densely populated Muslim towns/villages.
    Lets face reality and support the Nation and the authorities to save our "MAATHRUBOOMIYA" from this dreadfull killer disease, Insha Allah. We have failed to live the "Way of Life" ISLAM has thought and violated some of the "NORMS of Islam and the preaching of our Holy Prophet Mohamed "Peace be upon him" with regards to this epidemic. The All Ceylon Jamiyathul Ulema and the Tablique Jamath did not come out to inform the Heath authorities the names of the groups who had travelled to Indonesia, Malaysia, India (Nazimuddin Markus Delhi), Germany, Bangaladesh and other countries (when social media suggestions were made) during the period December to March/April 2020 and who were or had returned to Sri Lanka, because it is evident that most of them had gone into hiding and brought out later by the Army as infected persons, nothwithstanding the fact that members of the other communities had and were carriers of "COVID19" in Sri Lanka, also coming from abroad. So, as a respected and educated muslim, you should write an article and tell our Muslim bretheren to be HONEST (to come out and be cured, Insha Allah) or to be buried according to ISLAM, if it the extreme, Insha Allah.
    IT IS NOT ONLY THE MUSLIMS WHO ARE BEEN BLAMED. Browse this link and you will see that the Tamils and Christians are also been blamed/admit being agents of contamination -
    சுவிஸ் போதகர் ஊடாகவே, யாழ்ப்பாணத்தில் கொரோனோ பரவியுள்ளது - Dr சத்தியமூர்த்திFriday, April 17, 2020
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. Mr. Noor Nizam.I dont know you are aware of the first person who infected with covid 19 was a guide for Italian tourists.After that so many Srilankans came from Italy and they fought with the authorities against isolation.Thats how corona spread. This wont come in the derana or hiru.Also other instances where majority community people defied the health authorities.Some news appeared in the mass media.Dont blame our people from hiding.They fear of being creamated instead of burial when they die.Their fear can be justifiable. By the way did you try to use your position to counter argue in Colombo Telegraph or any other places against cremating muslim janaza? Pls enlighten me. I think you arean ardent supporter of the present govt. So try do something in other English or Sinhala media using your influence explaining about Islam and about peaceful Muslim attitudes.In that way we get reward from Allah insha Allah. Yafy ibrahim.

    ReplyDelete

Powered by Blogger.