Header Ads



ஐஸ் ஹெரோயின் விற்பனையில், ஈடுபட்ட சந்தேக நபர் விளக்கமறியலில்


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஐஸ் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் இன்று திங்கள்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஐஸ் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் மற்றும் ஐஸ் ஹெரோயின் போதைப் பொருட்களும் இன்று திங்கட்கிழமை காலை கைப்பற்றப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து பிறைந்துறைச்சேனை பிரதேசங்களில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஐஸ் ஹெரோயின் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார் இவரிடம் இருந்து 16 கிராம் எடையுடைய 115 ஐஸ் போதைப் பொருள் பைகள் கைப்பற்றப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்டவர் தொடர்ந்தும் போதைப் பொருள் வியாபாரம் செய்பவர் என்றும், இவர் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்தவர் என்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபரையும் ஐஸ் போதைப் பொருளையும் இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதற்கு இணங்க எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளார்.



1 comment:

  1. போதைப்பொருள் விட்பதே சட்டவிரோதம் தானே! அதென்ன சட்டவிரோதமான முறையில் ?
    அரசினால் அனுமதிக்கப்பட்ட சாராயத்தை, அனுமதி பத்திரம் இன்றி விற்பனை செய்தால் இவ்வாறு குறிப்பிடலாம்.

    ReplyDelete

Powered by Blogger.