Header Ads



ஊரடங்குச்சட்டத்தை மீறிய வெளிநாட்டவர்களுக்கு, பொலிஸார் வழங்கிய நூதனமான தண்டனை


இந்தியாவில் உத்திரகாண்ட் மாநிலத்தில் ஊரடங்குச்சட்டத்தை மீறிய வெளிநாட்டவர்களுக்கு பொலிஸார் நூதனமான தண்டனையை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

உத்திரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் நகரில் பாயும் கங்கை நதிக்கரையோரம் நேற்றையதினம் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 10 பேர் ஊரடங்கு உத்தரவை மீறி கங்கை நதிக்கரையோரம் சுற்றித்திரிந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

அவர்களை பிடித்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெளிநாட்டினர் 10 பேரும் ஊரடங்கை மீறி கங்கையை சுற்றிப்பார்க்க வந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இதை அடுத்து, ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் 10 பேரிடமும் ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினர்.

தாங்கள் செய்த தவறை உணர்ந்த வெளிநாட்டினர் அனைவரும் தனித்தனியாக பொலிஸார் வழங்கிய இந்த தண்டனையை ஏற்று 500 முறை ‘நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்’ என எழுதி கொடுத்தனர். இதை அடுத்து அந்த வெளிநாட்டினரை பொலிஸார் எச்சரித்து விடுவித்தனர்.

1 comment:

  1. In this country.
    LAW can be made at any time, by any one , as per what comes into their mind at that time...

    Shame

    ReplyDelete

Powered by Blogger.