Header Ads



கொரோனாவை பற்றி தெரியாத, கண்டு கொள்ளாத நாடுகள்


கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் நடுங்கி வரும் நிலையில், இந்த வைரஸ் காரணமாக ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடுகளும் உள்ளது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகையே மிரட்டி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் இருக்கிறது. 

இந்த வைரஸ் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 39,566 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் இந்த வைரஸிடம் இருந்து தப்பிப்பதற்கு பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன.

மனிதர்களிடமிருந்து இந்த நோய் எளிதாக பரவுவதால், விமான போக்குவரத்து மூலம் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டில் இருக்கும் நபர்களை இந்த நோய் தாக்கிவிடுவதாக கூறப்படுகிறது.அதன் பின் அந்த நோய் மெல்ல, மெல்ல குறிப்பிட்ட நாடுகளில் பரவி, இப்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வடக்கு பசிபிக் கடற்பகுதியில் பலாவ் மொழிபேசும், சுமார் 18,000 மக்கள் தொகை கொண்ட சின்னஞ்சிறு நாடு பலாவ் தீவில், இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நாட்டின் நாணயம் அமெரிக்க டொலர் ஆகும். பசிபிக் பிராந்திய நாடுகள் பலவும் கொரோனாவின் கொடூர தாக்கத்தில் சிக்கி இருக்கின்றன.இதேபோல் சுமார் 1 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட குட்டிநாடான டோங்காவும் கொரோனாவின் பிடியில் சிக்கவில்லை.

சாலமன் தீவுகள், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா ஆகிய நாடுகளும் கொரோனா தாக்காத நாடுகளின் பட்டியலில் உள்ளன.இவைதவிர அண்டார்டிகா கண்டமும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் பசிபிக் கடலில் உள்ள வடக்கு மரியானா தீவுகள் நாடுகளில் முதலாவது கொரோனா பாதிப்பு அண்மையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பயணக் கட்டுப்பாடுகள் நிறைந்து இருப்பதால் தான் இந்தப் பகுதிகளில் எல்லாம் கொரோனா பரவவில்லை என்று கூறப்படுகிறது.

உலகின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் பெரும் பகுதி பிரேசிலில் தான் உள்ளது. இந்த காடுகளில் பல ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

இவர்கள் வெளி உலகத்தொடர்பு அதிகம் இல்லாமல் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா தற்போது அமேசான் காடுகளில் வாழும் மக்களிடமும் பரவத்தொடங்கியுள்ளது. 

அமேசானின் கொகமா பழங்குடியின இனத்தை சேர்ந்த 20 வயது நிரம்பிய இளம் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்ப்ட்டுள்ளது. 

அப்பெண் சுகாதாரப்பணியாளாராக செயல்பட்டு வருகிறார். அமேசானில் வாழும் பழங்குடியினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அது காடுகளில் வாழும் மற்றவர்களுக்கும் பரவும் அச்சம் நிலவி வருகிறது.

இதற்கிடையே வைரஸ் உறுதி செய்யப்பட்ட பெண் அவரது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், அமேசானில் கொரோனா வைரஸ் பரவியது இதுவே முதல் முறையாகும். 
 உலக நாடுகளை உலுக்கியிருக்கும் கரோனா தொற்று நுழையாத ஒரு நாடு உண்டு என்றால் அது வட கொரியா என்று அறியப்படுகிறது.

வட கொரியாவில் தற்போது கரோனா அறிகுறி மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என சுமார் 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரத் துவக்கத்தில் இது 2,280 ஆக இருந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கரோனா அறிகுறி தென்படவில்லை என்று பலரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வடகொரியாவில் இதுவரை ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும், எனினும், தொற்று ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.