Header Ads



கொரோனாவை விட ஆபத்தான வதந்திகள்

கொரோனா வைரஸ் குறித்து பரவூம் எந்த ஒரு வதந்தியையூம் மக்கள் நம்பக் கூடாது. போலி செய்திகளையூம், போலியான வீடியோக்களையூம் நம்பாதீர்கள். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யூம் எந்த ஒரு விஷயமும் பயங்கரமான விளைவை ஏற்படுத்தி விடும்.

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க வேண்டும் எனில் மக்கள் வீட்டிலேயே இருப்பது நல்லது.வருகிறது. இன்னொரு விழிப்புணர்வாக பேஸ்புக், வட்ஸ் அப்பில் வரும் எதையூம் உண்மை அறியாமல் நம்பக் கூடாது. அத்துடன் அதை பரப்பவூம் கூடாது.ஏனெனில் இந்த வதந்தி பல ஆயிரம் மக்களை பேராபத்தில் தள்ளி விடும்

அண்மையில் யாரோ சிலர் கோழி இறைச்சி அல்லது முட்டையை உண்டால் கொரோனா வரும் என்ற வதந்தியை பரப்பினர். அதை நம்பிய மக்கள் அந்த உணவூகளைத் தவிர்த்தனர்.

பழந் தமிழர் மருத்துவம் இன்னொரு வதந்தி. பழந் தமிழர் மருத்துவத்தில் கொரோனா மாத்திரை இருப்பதாக சிலர் வதந்தி பரப்பி விட்டார்கள். இதுவூம் சில நாட்களாக உலா வந்தது. அதாவது ‘கோரோசன மாத்திரை’ என்று இருந்ததை கொரோனா மாத்திரை என்று மாற்றி பரப்பி இருக்கிறார்கள். இதை யாராவது உண்மை என தயார் செய்தால் என்னவாகும் நிலைமை!

இதேபோல் கொரோனா வைரசுக்கு இதை செய்தால் உடனே சரியாகும்இ அதை செய்தால் உடனே சரியாகும். கொரோனாவூக்கு தடுப்பு மருந்தாக இதை பயன்படுத்துகிறார்கள். இதை செய்கிறார்கள் என்று கணடபடி வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு வதந்திகள் பரப்படுகின்றன. இந்த வதந்திகளை அப்படியே நம்பும் அப்பாவி மக்கள் கொஞ்சமும் யோசிக்காமல் தெரிந்தவர்கள் எல்லாருக்கும் பகிர்கின்றார்கள். இது பலரது உயிருக்கும் உலை வைத்து விடக் கூடும்.

எனவே வட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக வலைத் தளத்திலும் கருத்துச் சொல்லும் பேர்வழிகளை எட்ட வையூங்கள். பொய்ச் செய்திகளைப் பரப்பும் எவரையூம் நம்பாதீர்கள். அது உங்களை மட்டுமல்ல உங்களை சுற்றியூள்ள சமூகத்தையே தவறாக வழிநடத்தும். கொரோனாவை விட கொரோனாவால் ஏற்பட்டுள்ள பீதியே மக்களுக்கு இன்று ஆபத்தானதாக இருக்கின்றது.

No comments

Powered by Blogger.