Header Ads



ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை, ஆஜர்செய்ய ஆட்கொணர்வு மனு - பிரபல சட்டத்தரணிகள் ஆஜராகின்றனர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரால் கடந்த 14ம் திகதி கைது செய்யப்பட்ட உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை உடனடியாக நீதிமன்றில் ஆஜர்செய்து இடைக்கால நிவாரணமாக பிணை வழங்குமாறு கோரி சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சிறுபான்மையினரின் நலன் தொடர்பாக வழக்குகள் பலவற்றில் முன்னிலையாகி வாதாடிய உயர்நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் கைது, அவரது தொழில் சார்ந்த சட்டரீதியான செயல்பாட்டை தடை செய்யும் நோக்கில் கைது செய்து தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் கட்சிகாரர்களில் ஒருவர் உயிரித்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சநதேகநபர்களில் ஒருவர் என்பதால் அவர் சார்பாக சில குடியியல் வழக்கில் நீதிமன்றில் ஆஜராகியதை தவிர அவர்களுடன் வேறு எந்த தொடர்புமற்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டமை சட்டத்தரணிகளின் தொழில்ரீதியான செயற்பாட்டில் சட்டரீதியற்ற முறையில் தலையீடு செய்வதாகும்.

இத்தகைய சட்டமுறையற்ற நீதிக்கு புறம்பான கைதும் தடுத்து வைத்தல் தொடர்பான உடனடியாக இடைக்கால தடை உத்தரவு வழங்குபடியும், சட்டத்தரணியை எந்த நிபந்தனையின் கீழும் பிணையில் விடுதலை செய்யுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த ஆட்கொணர்வு மனுவானது எதிர்வரும் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதுடன், இவ்வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் சாலிய பீரிஸ், கே.வி தவராசா மற்றும் சட்டத்தரணிகள் குழாத்தினரும் ஆஜராகவுள்ளனர்.

1 comment:

Powered by Blogger.