Header Ads



சரணாகதி அரசியலை நோக்கி, இலங்கை முஸ்லிம்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்களா..?

பெரும்பான்மைவாதம் (majoritarianism) விழிம்புநிலைப் படுத்தல் (marginalisation) என்பவை இன்று குறைந்த முயற்சியில் அதிக இலாபம் தரும் முதலீடுகளாக அரசியலில் மாறிவிட்டன. இந்தியா இதற்கான உதாரணத்தையும் முன்மாதிரியையும் வழங்கிங்கிவருகின்றமை முக்கியமானது. இந்தியாவை விடுத்து பர்மா, இலங்கை, அமெரிக்காவின் வெள்ளை மேலாண்மைவாதம் White supremacy) என்பன இத்தகு பின்னனியில் அரசியல் கட்டமைப்பை மாற்றிவரும் சில நாடுகளாகும். இந்நாடுகளில் சிறுபான்மையினரிற்கு எதிராக பெரும்பான்மையினரை திசைப்படுத்தல் இரண்டு வகைகளில் நடாத்தப்படுகின்றமை அவதானிக்கத்தக்கது. ஒன்று, 

அவர்கள் தேசப்பற்றற்றவர்கள் என்பதனை பரப்புதல், இதற்காக ஊடகங்களை பெருமளவில் பயன்படுத்திக் கொள்வது.

இரண்டாவது, சிறுபான்மையினர் தங்களது மதத்திற்கு, கலாச்சாரத்திற்கு சவால்விடுகின்றவர்கள், எதிரானவர்கள் என்பதனை ஓர் அச்சமாக பெரும்பான்மையினர்களுக்கு மத்தியில் பரப்புவது. இந்த இரு முயற்சிகளும் மிகவும் உணர்வுமிக்கவை செயற்திறன் கொண்டவை. 

இந்த மாதிரிகள் இலங்கையில் மிகவும் கணகச்சிதமாக களத்தில் பிரயோகிக்கப்படுகின்றமை நின்மதியற்ற ஒரு சூழலை முஸ்லிம்களுக்கு உருவாக்கியுள்ளது. 

இலங்கையில் கடந்தகால அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு ஆட்சி உருவாக்கத்திலும் சிறுபான்மயினர் குறிப்பாக முஸ்லிம்கள் தங்களது வகிபாகத்தை தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக கருதியிருந்தது மாத்திரமல்லாது சில தேர்தல்களில் அவர்கள் அதனை நிரூபித்தும் காட்டியிருந்தனர். என்றாலும் அடுத்த ஆட்சியை பிடிப்பதற்கான மிக நீண்ட திட்டத்தில் தற்போதைய அதிகாரவர்க்கம் ஒரு நுட்பமான இலக்கை நோக்கி செயற்பட்டது. அதாவது பெரும்பான்மை வாக்குகளை இலக்குவைப்பதே அவரகள் ஆட்சியைக் கையகப்படுத்துவதற்கான ஒரே வழி என்றான போது, இதற்காக பலிகொடுக்க தமிழ் சமூகத்தினை தெரிவு செய்வது அவ்வளவு தூரம் கவர்ச்சிகரமான ஒன்றாக பெரும்பான்மையினரிற்கு மத்தியில் எடுபடாது என்பதோடு இதற்கு முந்திய தேர்தலில் தமிழர்களுக்கெதிரான யுத்த வெற்றிக் கோஷம் தோல்வியடைந்ததும் அவர்களுக்கு நன்றாக தெரியும். எனவே அடுத்த மிகச்சிறந்த தெரிவாக முஸ்லிம்கள் காணப்பட்டனர். முஸ்லிம்களை இலக்குவைப்பதற்கான மாதிரிகள் இந்தியா, பர்மாவிடமிருந்து பெறப்பட்டன. 

இந்த திட்டத்தின் பிரகாரம் முஸ்லிம்கள் தொடர்பில் ஒரு அச்சமானதும் சந்தேகம் மிக்கதுமான மனோ நிலை பெரும்பான்மையினருக்கு மத்தியில் உருவாக்கப்பட்டபின்னர் அவர்களது உடமை, வியாபாரம், பொருளாதாரம், உயிர் என்பவற்றின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனை சரிகாணும் மனோநிலைக்கு பெரும்பான்மையினரில் அதிகமானோர் ஏலவே வந்துவிட்டனர்.

அத்தோடு முஸ்லிம் விரோத அலையை உண்டாக்கி அதனூடாக பௌத்த சிங்கள வாக்குகளை பெறும் வேலைத்திட்டங்கள் பன்சலைகளிலும் முடுக்குவிடப்பட்டிருந்தன.

இத்தனைக்கும் மத்தியில் ஆட்சியை இதே திட்டத்தின் அடிப்படையில் பெற்றுக்கொள்வதில் வெற்றியடைந்தும்விட்டார்கள்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இதனை ஒரு நிலைமாறு கட்டமாக குறிப்பிடமுடியும்.

ஏனெனில் இதன் பின்னரான நாட்டுநடப்புக்களில் முஸ்லிம்கள் மாற்றான் பிள்ளை மனோநிலையிலேயே நடாத்தப்படுகின்றனர். 

மேலும் கடந்த தேர்தலில் முஸ்லிம்கள் ஏன் தங்கள் கூட்டின்மீது  அதிருப்தி கண்டார்கள் என்பதனை தேடிப்பார்ப்பதனை விட்டுவிட்டு அவர்களை பழிதீர்க்கும் கொள்கையை அதிகாரம்மிக்க சிலர் கையிலெடுத்திருப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது. 

ஒன்று எம்மிடம் சரணாகதி அடையுங்கள் இல்லையேல் கடந்த காலங்களில் உங்கள் துன்ப வரலாற்றை மீட்டுவோம் என்பதனை பல முக்கியஸ்தர்கள் பகிரங்கமாக கூறிவருகின்றமை ஆச்சர்யமான ஒன்று. 

அதிகாரத்தை அடைந்துகொள்வதற்காக ஒரு சமூகத்தை பலிக்கடாவாக்கும் ஈவிரக்கமற்ற அரசியல் கொள்கை பல முகாம்களை சேர்ந்த அரசியல்வாதிகளையும் கவர்ந்துவருகின்றமை பல நிகழ்வுகளூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இடதுசாரிகளும் இதற்கு விதிவிலக்கற்றவர்களாக மாறிவருகின்றனர். 

இன்று முஸ்லிம்கள் இருக்கும் வரலாற்றுச் சூழல் மிகவும் முக்கியமானது. எமது அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து செயற்படவேண்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் எடுக்கப்படும் எமது முடிவுகள்தான் அடுத்த கட்டத்தில் எமது இருப்பின் தன்மையை தீர்மானிக்கப்போகின்றது.

ஆனாலும் இந்த சரணாகதி அரசியல் சூழ்நிலையை சரிகண்டு நியாயப்படுத்தும் சிலர் இருக்கவே செய்கின்றனர். இங்கு நாம் யாரை ஆதரிக்கின்றோம் என்பது தனிமனித விருப்பு வெறுப்போடு சார்ந்ததாக இருந்தாலும் எம்மை நிர்க்கதிக்குள்ளாக்கி அடிமைப்படுத்தி ஆதரவினை பெறுவது என்பது ஏற்க முடியாதது. நாகரீக உலகில் அரசியல் சார் கருத்துக்களிலும் நிலைப்பாடுகளிலும் பல நாகரீகமான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலத்தில் எம்மை பிற்போக்கான நாகரீக முதிர்ச்சியற்ற பொறியில் சிக்க வைத்து அரசியல் இலாபம் காண முற்படுவது ஏற்க முடியாதது. 

என்றாலும் நிஜத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு அச்சத்துடன் முஸ்லிம் சமூகம் வாழ்கின்றது. இந்த நிலையிலிருந்து நாம் மீள்வது என்பது ஒரு பாரிய வேலைத்திட்டத்தை வேண்டி நிற்கின்றது. எனவே இது தொடர்பில் அடுத்த கலந்துரையாடல் அமையவேண்டும்.

றிஸான் சுபைதீன்-(Naleemi)
 B.A, Adv Dip in Development Studies and Public Policy,
L.L.B (R)

8 comments:

  1. மீண்டும் சாணக்கியரின் பின்னால் திரண்டு சென்றால் அனைத்தும் சரியாகும்.

    ReplyDelete
  2. பெறுமதிமிக்க கட்டுரை,உங்களுடைய ஆயுளை அல்லாஹ் நீளமாக்கி முஸ்லிம் சமூகத்தை பிரயோசனமடையச்செய்வானாக,

    ReplyDelete
  3. மிகச் சரியான உண்மை.நாம் தற்போது அதுவும் கோரோனா பிரச்சினையை வைத்து முஸ்லிம்கள் பழிவாங்கப்படுவதும்,ஊடகங்களால்( ஒரு சில) கோரோனாவை முஸ்லிம்கள்தான் உருவாக்கி இலங்கைக்குல் பரப்பி விட்டது போல் ஒரு பிம்பம் கண கட்சிதமாக திட்டமிட்டு அரங்கேறி வருகிறது.எமது பிரதேசங்கள் மத அடிப்படையில் முடக்கப்படுகிரது.அப்படி கொரோனாவை காரனங்காட்டி முடக்கினாலும் அந்த மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை பெறவும் முடியாமல் அரசும் வழங்காமல் உள்ள நிலை எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பை இப்போதே புரிந்து கொள்ளக் முடிகிறது.ஆனால் எதிர்காலம் மிகம் ஒரு ஆபத்தான நிலமையாக வரும் என்பதை இப்போதே கொஞ்ஞம் ஊகித்துக் கொள்ள முடிகிறது.சில இனவாத ஊடகங்கள் முஸ்லிம்களை அழித்து ஒழிக்கும் திட்டத்துடனும்,சில இனவாதிகல் அதற்கு ஆதரவாக உள்ளதும் தற்போது அதிகமாக எம்மால் தினமும் காணக்கூடியதாக உள்ளது.

    ReplyDelete
  4. இங்கு அத்தாவுல்லாவின் அடிமைகளுக்கு எதுவுமே புரிவதில்லை ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்காக நாயாக அலைகிறார்கள். சமூகம் எத்தனை இன்னல்களுக்கு உள்ளானாலும் அதை கேட்க அத்தாவிற்கும் அடிமைகளுக்கும் வக்கில்லை ஆனால் ஹக்கீமையும் ரிஷாத்தையும் நோக்கி கையை நீட்டி நழுவிவிடுவார்கள் ஆனால் பாவம் இம்முறையும் தேர்தலில் மண்ணை தான் கவ்வுவார்கள்

    ReplyDelete
  5. யார் அந்த சாணிநக்கியர்? இன்னும் சாணி புளிக்கள்ளயோ!

    ReplyDelete
  6. Mr.Lafir don't criticize, give suitable proposals/suggestions. We all have to learn; how to recognize others pros rather than cons...

    ReplyDelete
  7. மிகச்சரியான கணிப்பீடு. RSS - மோடி கூட்டத்தின் கேவலமான இனவாத, மதவாத அரசியலே இலங்கைக்கு "ரோல் மொடல்" ஆக உள்ளது. இஸ்ரேலின் வழிகாட்டல் இவர்களுக்கு போதுமான அளவு கிடைக்கிறது.

    ReplyDelete
  8. இன்னும் மண்ணில் எழுதி படிக்கும் கூட்டங்களுக்கு எங்கே இந்த கட்டுரை வாசகர்களை நகர்த்துகின்றது என்பது புரியாது.

    ReplyDelete

Powered by Blogger.