Header Ads



அரபு பெண்களை இழிவுபடுத்திய பாஜக எம்.பி மீது நடவடிக்கை எடுங்கள் - மோடிக்கு குவைத் வழக்கறிஞர் கோரிக்கை

அரபு நாட்டுப் பெண்கள் பற்றி அவதூறாக ட்வீட் செய்த பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குவைத் நாட்டின் வழக்கறிஞர் அல் ஷரிக்கா ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூர் தெற்கு தொகுதி நாடாளுமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, ட்விட்டரில் அரபு நாட்டு பெண்கள் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க ஆபாசமான கருத்தை வெளியிட்டு இருந்தார். அவரின் ட்வீட்டுக்கு ட்விட்டர் நிறுவனம் கடும் கண்டனத்தை தெரிவித்தவுடன், அதை நீக்கி விட்டார். ஆனாலும் அந்த் ட்வீட்டின் ஸ்கீரின் ஷாட்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தேஜஸ்வி சூர்யா, " 95 சதவீத அரபு நாட்டுப் பெண்கள் கடந்த பல நூற்றாண்டுகளாக உடலறவில் உச்சக்கட்டம் அடைந்தது இல்லை.

ஒவ்வொரு தாயும் உடலறவு மூலம் குழந்தை மட்டுமே பெற்றுக் கொண்டனர்,” என்று குறிப்பிட்டு இருந்தார்.

தேஜஸ்வி சூர்யாவின் ட்வீட்டுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்திற்கே இழுக்கு என்றும் கூறி உள்ளார்கள். இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீவத்ஸா , மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டுள்ள தேஜஸ்வி சூர்யா பாஜக வை வழிநடத்த வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் விரும்புவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் தேஜஸ்வி சூர்யாவின் கருத்து அரபு நாடுகளிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இத்தகைய கருத்துக்களை கூறியுள்ளது அரபு நாடுகளில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

குவைத் நாட்டில் பிரபல வழக்கறிஞர், பன்னாட்டு சர்ச்சைகளின் நடுவர், மனித உரிமை மையத்தின் இயக்குனர் என பல்வேறு பொறுப்புகளில் உள்ள அல் ஷரிக்கா பிரதமர் மோடிக்கு நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார்.

ட்விட்டர் மூலம் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டுள்ளவர், "மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி, அரபு நாடுகளுடன் இந்தியாவின் உறவு என்பது பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலானது. உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இப்படி வெளிப்படையாக பெண்களை அவதூறாகப் பேசுவதை நீங்கள் அனுமதிக்கிறீர்களா? தேஜஸ்வி சூர்யா வெளியிட்ட கருத்துக்களுக்காக அவர் மீது கடுமையான நடவடிக்கையை உடனடியாக எதிர்ப்பார்க்கிறோம்," என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

உடன் தேஜஸ்வி சூர்யாவின் ட்வீட் ஸ்கீரின்ஷாட்டை இணைத்துள்ளவர் பிரதமர் அலுவலகம் மற்றும் தேஜஸ்வி சூர்யாவை ட்வீட் கணக்கையும்யும் ட்வீட்டில் இணைத்துள்ளார்.

தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களால் தான் கொரோனோ பரவுவது போல் சமூகத்தளங்களில் பரப்பப்பட்டதற்கும் அரபு நாடுகளிலிருந்து கண்டனம் எழுந்தது. இந்தியாவிலிருண்ட்யு இறக்குமதியை தவிர்ப்போம் என்றெல்லாம் குரல்கள் எழுந்தது.

தற்போது பாஜக எம்.பி. ஒருவரே சர்ச்சையை உருவாக்கியுள்ளார். பெட்ரோல் விலை வீழ்ச்சி மற்றும் கொரோனாவினால் அரபு நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழப்பார்கள் என்று கூறப்படும் நிலையில், இது புது தலைவலியாக உருவாகியுள்ளது.

1 comment:

  1. அவருடைய மனைவி இப்படியொரு கணவன் கிடைத்தற்கு அல்லாஹ்விற்கு.ஆயிசுக்கும் நன்றி செல்லவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.