April 01, 2020

வபாத்தான எனது தந்தை குறித்து, இட்டுக்கட்டப்பட்ட போலியான பிரச்சாரம் - மகன் வேதனை

நீர்கொழும்பு வைத்தியசாலையில் மரணமடைந்த, எனது  தந்தையான மொஹமட் ஜமால் குறித்து, போலியான பிரச்சாரங்கள் சிங்கள ஊடகங்களில் முன்னெடுக்கப்படுகிறது. அதனை நம்பி முஸ்லிம் சமூகத்தில் உள்ள சிலரும் சமூக ஊடகங்களில் வாந்தி எடுத்து வருவதாக அவரது மூத்த மகள் கியாஸ் கூறினார்

அவர் இதுகுறித்து, மேலும் குறிப்பிட்டதாவது,

எனது தந்தை தர்மம் செய்வதில் சிறந்தவர். விருந்தோம்பலில் நாட்டம் மிக்கவர். எவருடைய மனதையும் புண்படுத்தி செயற்படுபவர் இல்லை. மிகவும் இரக்க குணமுடையவர்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்திய காலத்தில் இருந்து, வீட்டிலேயே தொழுது வந்தார்.  தானும் தனது பாடும் என்றிருந்தவர். மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்.

நாங்கள் எதனையும் மறைக்கவோ அல்லது ஒழிக்கவோ இல்லை.

எங்களது தந்தையை இழந்து, உம்மா இப்போது இத்தா கடை பிடிக்கிறார். தந்தையின் இறப்பு மற்றும் உடல் எரியூட்டல் சம்பவ துயர்களில் இருந்து நாங்கள் இன்னும் விடுபடவில்லை.

நிலைமை அப்படியிருக்க, சில சிங்கள ஊடகங்கள் இட்டுக்கட்டிய செய்திகளை உருவாக்கி அவற்றை பதிவேற்றி வருகின்றன. அவற்றை கேள்விப்படுகையில் மனம் துயரடைவதுடன் ஏன் அந்த ஊடகங்கள் இப்படிச் செயற்படுகின்றன என மனம் பதைபதைக்கிறது. ஏன் எமது தந்தையின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துகின்றன என மிகக் கவலையாக உள்ளது.

சிங்கள ஊடகங்களின் போலியான தகவல்களை நம்பி, முஸ்லிம் சகோதரர்களும் அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளதாக அறிகிறோம்.

தயவுசெய்து நாம் இதனுடன் தொடர்புட்ட சகலரிடமும் வேண்டிக் கொள்வது யாதெனில், துன்பத்தில் உள்ள எங்களை மீண்டும் துன்பத்தில் மூழ்கடிக்காதீர்கள் என்பதாகும்.

தற்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள நாம், அங்கு 15 நாட்கள் தங்கியாக வேண்டும். எமது நிலையை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

எனது தந்தைக்காக, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். 

இத்தோடு எனது தந்தை குறித்த போலியான தகவல்களை பரப்புவதையும், அந்தத் தகவல்களை நம்புவதையும் நிறுத்திக் கொள்ளுங்கள். நம்மனைவருக்கும் அல்லாஹ் நேரான வழியை காண்பிக்கட்டும் எனவும் மொஹமட் கியாஸ் ஜமால் உருக்கமாக  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

9 கருத்துரைகள்:

முஸ்லிம்களே முஸ்லிம்களை குறைகாணும் முஸ்லீம் பெயர்கொண்ட சைக்கோக்களின் கதைகளை கேட்டு உங்கள் முஸ்லீம் சகோதர்களின் உள்ளத்தை உடைத்துவிடாதீர்கள்

கியாஸ் பொறுமையாக இருங்கள் அருகில் இருந்து ஆறுதல் சொல்ல கூட முடியாத நிலையில் எமது நிலை நிச்சயம் மறுமை சிறந்தது உங்கள் தந்தைக்கு எமது துஆ மட்டும் அல்ல பூரா இலங்கை முஸ்லிம்களின் துஆ உண்டு.. பொறுமை இழந்து விட வேண்டாம் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.. ஜமால் நாநாவின் நண்பன் சலீம்....

அல்லாஹ் உங்கள் தந்தையை பொருந்திக்கொள்வானாக ஆமீன்!அல்லாஹ் உங்களோடு உள்ளான்.

உண்மையாகவே இந்த தொற்று நோய்தான் மரணத்துக்கான காரணம் எனின் அவருக்கு ஷஹீத் நன்மை கிடைக்கும் அத்துடன் அவரது அடக்கத்தில் நடந்த அநீதிக்கு மேலதிக நன்மையும் அல்லாஹ் கொடுப்பான் கவலைப்பட வேண்டாம்.

May Almighty grant your Dad Jannathul Firdhows!

Naam janaza gaayiba tholuthu dua seythirukkirom neengel kawalaippade wendaam allah pothumanawan

அல்லாஹ் உங்கள் வாப்பாவுக்கு ஷகீல் என்னும் உயர்ந்த அந்தஸ்தை வலங்குவானாக. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த கடிணமான வேலயில் றஹ்மத் செய்வானாக, பொறுமையைத்தருவானாக. அனீதம் இலைக்கப்பட்டவரின் துஆ நிச்சயம் கபுலலாகும். உங்கள் வருத்தங்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளானாக.

Ungalodayya aadangam athu ungaludayathalla.....poora emathu ummathuhaludayathu.....
Ungalin waapawin maranam allahwidam senthuwittathu nichayam awarukkaana anaitthum kidaytthu wittathu....awar seytha nanmaikku nerayya dua kkalay edutthukkondullaar.....
Nichayam sooolchihalilum periya sooolchi allahwida undu.....emathu naadu inru emmay tanimayyaakkiwittathu.....
Thatti kekkum Thiran illatha alawkku emmay mutchanthiyil kondu wittullathu....
Bt em makkal unara maattaarhal awarahaluku innum allahwin sothanay puriyawillay.....
Intha ooodahankalum nerayya anupawikka ullathu kaaranam sirupaanmay samoohatthin nadwaakkalay nerayya sambathitthu wittathu....anupawippaarhal kandukolwom....
Em samoooham allahway innum maranthu waalwathan kaaranam intha adayaalam.....
Allaway payanthu kollungal...
Ulaham temporary....
Permanent life undu....
Intha brotherku wantha sothanay illa ithu Allah namakku thantha paadam.....

Ibrhim alaiku neruppu kulirnthathu pol in thanthaium irunthirukum

Post a Comment