Header Ads



கொரோனாவும், நமது பொறுப்பும் - சுகாதார அமைச்சின் 8 முக்கிய வழிகாட்டல்கள்

சமூகவலைதளங்கள், இணையங்களில், ஏனைய ஊடகங்களில் கொரோனா கொவிட் 19 தொடர்பான செய்திகளை பதிவேற்றம் செய்யும் போது பொறுப்புடன் நடந்து கொள்ளவதற்கான வழிகாட்டல்கள்.

கொவிட் 19 தொடர்பில் செய்தி அறிக்கையிடலின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார அமைச்சின் வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுனிரூபம்.

கொவிட் 19 வைரஸை இல்லாதொழிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு ஊடகங்கள் பாரிய பங்களிப்பை வழங்குகின்றமைக்காக நன்றி.இந்த சந்தர்ப்பத்தில் ஊடக நிறுவனங்களினால் கீழ் காணும் நடைமுறைகளை பின்பற்றினால், கொவிட் 19 வைரஸை இல்லாதொழிக்கும் திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கலாம்.

01. கொவிட் 19 தொடர்பில் செய்தி எழுதும் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மை(Truth) மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட(accuracy) விடயங்களை மாத்திரமே பகிரவும்.

02. தனிமைப்படுத்தப்பட்டு (Quarantine) கண்காணிக்கப்படும் நபர்கள், நோயாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கையிடலின் போது, இனம்,மதம் குறிப்பிடல் தவிர்த்தல்.

03. வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான நபர் நோயாளி மாத்திரமே,மாறாக நோயை பரப்பும் நபர் என்ற விதத்தில் செய்தியை அறிக்கையிடல் தவிர்க்கப்படல் வேண்டும்.

04. தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான (Scientific) ரீதியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு செய்தி எழுதப்பட வேண்டும். சுய கருத்துக்களை சமூகமயமாக்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.

05. தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் நபர்கள் மற்றும் நோயாளர்களின் புகைபடங்கள், வீடியோக்கள் அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம்.

06. உயிரிழந்த நபரொருவரின் உணர்வுப்பூர்வமான படங்கள் மற்றும் வீடியோக்களை "தெளிவின்மைப்படுத்தி"-அடையாளப் படுத்த முடியாதவன்னம்- பயன்படுத்துவது சிறந்ததாக அமையும்.

07. மக்கள் மத்தியில் கோபத்தை தூண்டும் வகையில் செய்தி அறிக்கையிடுவதை தவிர்க்கவும்.

08. கொவிட் 19 நிலைமை மக்கள் மத்தியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும், எதிர்காலம் குறித்து நல்ல எதிர்பார்ப்பு மற்றும் ஒவ்வொருவருக்கு இடையில் ஒத்துழைப்புக்களை அதிகரிக்கும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்.

குறிப்பு:
பின்பற்றப்பட வேண்டிய எட்டு விடயங்களை முடியுமான அளவு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.நிலமையை சீராக்க ஒவ்பொரு பிரஜையும் உதவுவது பொறுப்பு என்பதை நினைவில் வைத்து செயலாற்றுவோம். 

Mohamed Riyath


No comments

Powered by Blogger.