Header Ads



205 நாடுகளில் கொரோனா தொற்று என்கிறது - WHO


கொரோனா வைரஸ் தொற்று தற்போது 205 நாடுகளில் பரவியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

தொற்றால் பாதிப்படைந்துள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து நிவாரணம் வழங்க முன்வந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனோம்  தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து வார காலப்பகுதியினுள் தொற்றுக்கு உள்ளான புதியவர்கள் மற்றும் இறப்பு என்பன அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக கடந்த வாரத்தில் அந்த தொகை இரட்டிப்பாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் ஜெனீவா செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அடுத்த சில வாரங்களில் இந்த தொற்றுக்கு 10 லட்சம் மக்கள் உள்ளாகுவதுடன் 50 ஆயிரம் பேர் வரை மரணிப்பதற்கான வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனோம் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.