Header Ads



மார்ச் 17 மலேசியாவில் இருந்து ஒ.டி. 185 விமானத்தில், இலங்கை வந்த சகலரும் தனிமையாகுங்கள்

(எம்.எப்.எம்.பஸீர்)

புத்தளம் கடைமன் குளம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 50 வயதான கொரோனா வைரஸ் தொற்றாளருடன் கடந்த 17 ஆம் திகதி மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்த ஒ.டி. - 185 எனும் விமானத்தில் வந்த அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். 

 புத்தளம் கடைமன் குளம் தொற்றாளர் நெருங்கிப் பழகிய 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

 மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்துக்கு கடந்த பெப்ரவரி மாதம்  ஆன்மீக சுற்றுலா முன்னெடுத்திருந்த  குழுவின் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்று எற்பட்டிருப்பது  முதலில் கண்டறியப்ப்ட்டது.

 அதனையடுத்து  புத்தளம் - கடைமன் குளம் பகுதி முழுதும் தனிமைபப்டுத்தப்பட்டது. அதில் அடையாளம் காணப்பட்ட பலர் புத்தளம் சாஹிரா கல்லூரி தனிமைபப்டுத்தல் மையத்தில் தனிமைபப்டுத்தப்ப்ட்டனர்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களில்  20 பேரின் இரத்த மாதிரிகளை  அனுராதபுரம் வைத்தியசாலையில்  விசேட  பரிசோதனை அதிகாரிகளால், சாஹிரா கல்லூரிக்கு வந்து பெற்றுக்கொன்டு விசேட பரிசோதனைகளை முன்னெடுத்தனர். 

இதன்போதே அதில் 10 பேருக்கு கொரோன ஐருப்பது உறுதிச் எய்யப்ப்ட்டது. அவர்கள் அனைவரும் ஆன்மீக சுற்றுலா  சென்ரு திரும்பிய்வருடன் நெருக்கமான தொடர்பாடல் வட்டத்தில் இருந்தோர் என தெரியவந்துள்ளது.  

இந்த 10 பேருக்கும் இதுவரை கொரோனா அறிகுறிகள் தென்படவே இல்லை என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகின்றார். இவ்வாறான நிலையில் அவர்களுக்கு கொரோனா இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இந் நிலையில் அவர்கள் 10 பேரும்,  நேற்று அதிகாலை, இராணுவத்தின் விசேட பஸ்ஸின் ஊடாக அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 8 பேர் ஆண்கள் என்பதுடன் இருவர் பெண்களாவர்.

 இந் நிலையிலேயே புத்தளம் - கடைமன் குளம்  முதல் தொற்றாளர் மலேசியவிலிருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் வருகை தந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள 36 பேருக்கு தனிமைப்படுத்தலில் இருக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.