Header Ads



அமித் வீரசிங்க தேர்தலில் களமிறங்குகிறான் - சுயேட்சையாக கண்டியில் வேட்புமனு தாக்கல்


முஸ்லிம் மக்களுக்கு எதிரான கண்டி வன்முறையில் முக்கிய பங்கை வகித்தவராக குற்றம் சுமத்தப்பட்டிருந்த 'மஹாசன் பலகாய'வின் அமித் வீரசிங்க நாடாளுமன்ற தேர்தலுக்காக நேற்று -12- தமது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

தமக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமித் வீரசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் சுயேட்சைக்குழுவின் சார்பில் கண்டி மாவட்டத்தில் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் ஒருவருக்கு 2000 ரூபாவே கட்டுப்பணமாக செலுத்த வேண்டியுள்ளது.

இந்தக் கட்டுப்பணம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

இதேவேளை வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்தினம் மார்ச் 19ஆம் திகதியாகும்.

3 comments:

  1. He may win, because has support from most of Singala people

    ReplyDelete
  2. He will get lost soon
    King of digana killings

    ReplyDelete
  3. எல்லா சிங்களவர்களும் இனவாதிகள் இல்லை। இவன் நிச்சயம் தோற்கடிக்கப்படுவான்।

    ReplyDelete

Powered by Blogger.