March 30, 2020

காலைக்கதிரின் இனவாத செய்திக்கு, யாழ்ப்பாண முஸ்லிம்கள் கண்டனம்


“மலேசியாவில் தொற்றைப் பரப்பிய மசூதிக் குழுவால் இங்கும் ஆபத்து: அந்த நிகழ்வில் பங்குபற்றிய 3  குழுக்கள் இலங்கையில் சுதந்திரமாக நடமாட்டம்” என்ற பிரதான தலைப்புச்செய்தி 30-03-2020 அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெளிவரும் மூத்த ஊடகவியலாளர்  ஒருவரால்   நடத்தப்படும் காலைக்கதிர் பத்திரிகையில் வெளிவந்திருந்தது.
மேற்படி செய்தியின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்தபோது அது சோடிக்கப்பட்ட; உண்மைக்குப் புறம்பான; இனவாத நோக்கம்கொண்ட; செய்தி என்கின்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் கொரோன தொற்றுக்கும் முஸ்லிம்களே காரணம்  என்று முஸ்லிம்களின் மீது பழிபோட நினைக்கும் இத்தகைய இனவாத ஊடகங்களின் முகத்திரையைக் கிழிக்கும் அதே சமயத்தில்  பொறுப்புவாய்ந்த இலங்கை மக்களாக  குறித்த தொற்றுக்கு குறித்து எமக்கிருக்கும் சமூகப் பொறுப்புக்களையும் நாம் நிறைவேற்றாகி கடமைப்பட்டிருக்கின்றோம்

2020 பெப்ரவரி 28,29 மற்றும் மார்ச் 01 திகதிகளில் மலேசியாவின் புறநகர்ப்பகுதியில் தப்லீக் ஜமாஅத்தின் இஜ்திமா இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு கொவிட்-19 வைரல் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது  இதுகுறித்து ரொய்ட்டர் செய்தி நிறுவனம்

மலேசிய சுகாதார அமைச்சினை மேற்கோள்காட்டிய   ரொய்ட்டர் செய்திச்சேவையின் மார்ச் 12  ம் திகதியை செய்தியின் பிரகாரம் குறித்த மாநாட்டில் 10 ,000 ற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டார்கள் என்றும் அதிலே 12  மலேசியர்களும் ஒரு புரூணை  நாட்டைச்சேர்ந்தவரும் இதுவரை கொரோன தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் அம்மாநாட்டில் கலந்து  கொண்டிருந்த மலேசிய நாட்டைச்சேர்ந்த 5000  ற்கும் அதிகமானவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்  என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இச்செய்தியின் பிரகாரம் மார்ச் மாதம் 12 ம் திகதியே குறித்த நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் அடையளாம் காணப்பட்டுவிட்டார்கள்.

இலங்கை இராணுவத் தளபதி  சவேந்திர சில்வா அவர்களை மேற்கோள்காட்டி கலைக்கதிர்  வெளியிட்டுள்ள  செய்தியில் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு அவசியமான அல்லது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் தகவல்கள் எதுவும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை மாற்றமாக யாழ்ப்பாணம் அல்லது வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் குறித்தும் மசூதிகள் குறித்தும் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்துவதனையே குறித்த செய்தி நோக்கமாகக் கொண்டிருக்கின்றது, என்பது மிகவுமே வெளிப்படையானது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி கொவிட் வைரஸின் ஆயுள்காலம்  14  நாட்கள் என்றே அமைகின்றது. அவ்வாறாயின் மார்ச் 01  ம் திகதி முதல் மார்ச் 30  ம்  திகதிவரை  30  நாட்கள் கடந்துவிட்ட பின்னரும்  கொவிட் - 19 வைரஸ் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள் என்றால் அவர்களுக்கு நோய்த் தொற்று இல்லை என்றே அர்த்தப்படும். இந்த உண்மையை மறைத்து அவர்களை குற்றவாளிகளாக காட்டுவதற்கு  கலைக்கதிரும் முயற்சிப்பது ஏன் என்று புரியவில்லை.

உலகப்பேரவலாம்  நிகழ்ந்து கொண்டிருக்கின்றது; மக்கள் நாளாந்த வாழ்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்; எங்கும் அவலமும் அச்சமும் நிறைந்திருக்கின்றது; இந்த சந்தர்ப்பத்தில், ஈனத்தனமாக இனவாதம் பேசுவோரும்;  ஒரு சமூகத்தினை இலக்குவைத்து பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுப்போரும்; மனிதப்பிறவிகளா என்ற சந்தேகம் எமது உள்ளங்களில் எழுகின்றது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கும் பரவலுக்கும் முஸ்லிம்களே காரணம் என்ற தோற்றப்பாட்டை உருவாக்க முயலும் சிங்கள இனவாதத்தின் கைக்கூலிகளாகவே கலைக்கதிர் பத்திரிகையும் அமைந்திருக்கின்றது என்பதும் வெளிப்படை. 

இத்தகைய இனவாத கைக்கூலிகளுக்கும்   அவர்களது இனவாத பொய்ப்பிரச்சாரங்களுக்கும்  இலங்கை முஸ்லிம் மக்கள் சார்பில் எமது பொதுவான கண்டனங்களை முன்வைக்கின்றோம். 

அதே சந்தர்ப்பத்தில் மலேசியாவில்  இடம்பெற்ற தப்லீக் ஜமாஅத்தின் இஜ்திமாவில் இலங்கையில் இருந்து எத்தனை குழுக்கள் கலந்துகொண்டன என்ற விபரங்களை இலங்கை தப்லீக் ஜமாஅத்தின் தலைமையகம் வெளியிடல் வேண்டும். 

இம்மாநாட்டில் எவரேனும்  இலங்கை முஸ்லிம்கள் கலந்துகொண்டிருந்தால், அவர்கள்  இலங்கை சுகாதாரத் துறையினரின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளை முறையாக முன்னெடுத்து, தமக்கு நோய்த்தொற்று இருக்கின்றதா இல்லையா என்பதை உறுதிசெய்து,  கொவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும்; என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

யாழ் முஸ்லிம் சிவில் சமூகம் - புத்தளம்


5 கருத்துரைகள்:

pannda , for 5000 converting your religion hindu to christian dont blame mosque , donkey what happened ariyala chruch 110 swides prist shared china virus , without mention ariyal chruch china virus why donky publish , same matter happend vauniya ,hatton ,

இலங்கையில் யார் திருந்தினாலும் இழிவான தமிழ் பயங்கரவாதிகள் மட்டும் திருந்தப்போவதில்லை. இலங்கைக்கு சுவிஸ் நாட்டிலிருந்து கொரோனாவை பரப்பியவன் ஒரு தமிழ் தீவிரவாதி அதை பற்றி ஏன் இந்த எச்சை ஊடகம் பேசவில்லை ?

இதற்கு முன்னே அங்கு ஆராதன முடிந்து பிள்ளையார் சுழியும்கொரோன இற்கு போட்டு முடிஞ்சு.

இதுக்கெல்லாம் பதிலை நல்ல வடிவா எழுதலாம் பாருங்கோ. அப்படி எழுதினாலும் இவர்கள் என்ன திருந்தவா போகிறார்கள். முதலில் நாய் வாலை நிமிர்த்திவிட்டு வாருங்கள். பிறகு இவரகளைத் திருத்தலாமா என்று யோசிப்போம்.

Thabliq leadership should disclose the names of those who attended the Ijthima and guide them to get registered at the police station.

Post a Comment