Header Ads



பிரித்தானியாவுடன் ஒப்பிடும் போது இலங்கை, கொரோனா முறியடிப்பில் சிறப்பாக பங்காற்றுகிறது

பிரித்தானியாவுடன் ஒப்பிடும் போது இலங்கை கொரோனா வைரஸிற்கு எதிரான அச்சுறுத்தலில், நன்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டில் இருந்து வந்த சுற்றுலாப்பயணி ஒருவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸிற்கு எதிராக உலகநாடுகள் போராடி வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் நோயின் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை நன்கு ஏற்பாடு செய்யப்படுள்ளதுடன் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக, பிரித்தானியா சுற்றுலாப் பயணியான, Graeme Abbott பிபிசியிடம் கூறியுள்ளார்.

இவர் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன், மூன்று வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு வந்துள்ளார். இலங்கையில் 2 வாரங்கள் கழித்த இவர், இலங்கைக்கு விமானத்தில் செல்லும்போது, ​​அவர்களின் விவரங்களை நிரப்ப ஒரு படிவம் வழங்கப்பட்டதாகவும், அவர்கள் தரையிறங்கும் நேரத்தில், விமான நிலைய அதிகாரிகள் தங்கள் விவரங்களுடன் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், விமான நிலையத்தில் உடல் வெப்பத்தை சரிபார்க்க இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. விமான நிலையத்தில் இருந்து ஹோட்டல்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு சோதனைகளையும் செய்ய வேண்டியிருந்ததாக தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்தியின் தொகுப்பாளர் 2 நாடுகளில் செயல்படும் அமைப்புகளை அனுபவித்திருப்பதால், இதில் யார் சிறந்த முறையில், நன்கு தயார் செய்து வைத்துள்ளார்கள் என்று கேட்ட போது, அவர் உடனடியாக தயக்கமின்றி, பிரித்தானியாவுடன் ஒப்பிடும்போது இலங்கை மிகவும் சிறப்பாக மற்றும் பாதுகாப்புக்கு தேவையான தயார் நிலையில் இருப்பதாக தான் கருதுவதாக பதிலளித்துள்ளார்.

இலங்கையின் விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளும், பணியாளர்களும் முகமூடிகள் மற்றும் கையுறைகளுடன் தங்கள் பாதுகாப்புக்கு தேவையானதை அணிந்திருந்தனர்.

அதே நேரத்தில் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலைய ஊழியர்கள் தேவையான 1 மீற்றர் தூரத்தை பராமரிக்கிறார்கள் மற்றும் முகமூடிகள் அல்லது கையுறைகள் அணியாமல் இருக்கிறார்கள் என்று அவர் விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.