Header Ads



அரசு எடுத்த முடிவானது முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது, ஹரீஸ்

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டகளப்பு பல்கலைக்கழகத்தை   கொரோனா வைரஸ் நிலையமாக மாற்ற முயற்சிக்கு அரசாங்கத்தின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது 

வெளிநாட்டு நிதியை கொண்டு  மட்டக்கிளப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்கலைக்கழகத்தை கொரோனா வைரசுக்கான  சிகிச்சை நிலையமாக மாற்ற முயற்சிக்கு தற்போதைய அரசின் நிலைப்படனது மிகவும் தவறான ஒரு செயலாகும் என முன்னாள் இராஜாங்க அமைசர் எச் எம் எம் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இப் பல்கலைக்கழகமானது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பல சிரமங்களுக்கு மத்தில் உருவாக்கப்பட்டு வரும் நிலையல் இவ்வாறு கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்ற முயற்சிப்பதானது வருந்ததக்கது எனவே எமது நாட்டில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல்வேறு கட்டடத்தொகுதிகள் இருக்கின்ற நிலையல் இந்த பல்கலைக்கழகத்தை அரசு  தெரிவு செய்திருப்பதானது எனது பார்வையில் இனவாதிகளை திருப்பதிப்படுத்தும் ஓர் செயல் எனவும் முன்னால் ஐராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார் 

மேலும் இதை இங்கு அமைக்க அரசு எடுத்த முடிவானது  அதை அண்மித்து வாழுகின்ற முஸ்லிம்  மக்களுக்கு பெரும் பாதிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் கடந்த காலங்களில் தென்னிலங்கை இனவாத கும்பல்  இப்பல்கலைக்கழகத்தை தடை செய்ய கோரி பல கடுப்போக்கு செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையல் இன்று அரசாங்கம் இவ்வாறான அறிவித்தலை விடுதிருப்பதனாது எதிர்வரும் தேர்தலை குறிவைத்து  இனவாதிகளுக்கு தீனி போடுவதற்கு முயற்சிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் 

அகவே இதை அரசாங்கம் இப்படியான ஒரு இடத்தில் மேற்கொள்வதை கைவிட்டுவிட்டு வேறு ஒரு இடத்தில் அமைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.