Header Ads



நாட்டுக்குள் பலவழிகளில் மத மாற்றங்கள், பௌத்தர்கள் அந்த அலையில் சிக்கியுள்ளதை நாம் அறிவோம்


நாட்டில் மிகவும் தீவிரமாக பௌத்த மதத்தினர் அந்நிய மதங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாக பிரதமரும் பௌத்த மற்றும் கலாசார விவகார அமைச்சருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காலியில் விகாரை ஒன்றில் நடைபெற்ற சமய நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

நாட்டுக்குள் பல வழிகளில் மிகவும் தீவிரமாக மத மாற்றங்கள் நடப்பது எமக்கு தெரியும். பௌத்த மக்கள் அந்த அலையில் சிக்கியுள்ளதை நாம் அறிவோம்.

இதனால், இவை குறித்து பௌத்த சங்க சபையினரும், அதேபோல் மக்களும் புரிந்துணர்வுடன் கிராமத்தில் மத மாற்றம் செய்யப்படுவது தொடர்பாக கண்ணை திறந்து அவதானித்து கொண்டிருப்பது நல்லது என நம்புகிறேன்.

இவை குறித்து நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை;

    வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது;

    ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் -

    அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

    (அல்குர்ஆன் : 2:256)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. மதம் மாறுபவன் மாறித்தான் ஆகுவான் நீங்கள் எவ்வளவுதான் கண்காணிப்பில் ஈடுபட்டாலும் ஏனெனில் மத சுதந்திரம் உண்டென்பதாலும் அது அவனுக்கான மன ஆறுதல் என்பதாலும் தடுக்கவே முடியாது, ஏனெனில் பலாத்காரத்தில் யாரும் மாறுவதில்லை.

    ReplyDelete
  3. அரவாப்போன ஆட்சியாளர்களுக்கு தூண்டிவிட்டு சுகம் அனுபவிப்பதே வாடிக்கையாபோச்சி

    ReplyDelete
  4. Aaarambichuttaaangayya....election season allavo...

    ReplyDelete
  5. தேர்தல் நெரிங்கிவிட்டதூ

    ReplyDelete
  6. தேர்தல் நெரிங்கிவிட்டதூ

    ReplyDelete

Powered by Blogger.