Header Ads



பழீல் ஹாஜியாரின் 35 வருட அரசியல் வாழ்க்கைக்குக் கிடைத்த பரிசு


 எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் பேருவளை நகரபிதாவும், அரச ஹஜ் கமிட்டித் தலைவருமான மர்ஜான் பழீலுக்கு,  தேசியப்பட்டியலில் இடம் ஒதுக்கிக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

   இந்தத் தீர்மானம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ் ஆகியோரினால் எடுக்கப்பட்டுள்ளது. 

   இது தொடர்பிலான உத்தியோகபூர்வ தகவல், மர்ஜான் பழீலுக்கு (14) சனிக்கிழமையன்று  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையான ஆதரவாளர்கள் மர்ஜான் பழீலின் இல்லத்தில் (14)  ஒன்று திரண்டு, அவருக்கு தமது முழு அளவிலான ஆதரவுகளையும் உளம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். தங்களது பூரண ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வழங்குவதாகவும் இதன்போது குறிப்பிட்டனர்.

   இங்கு ஆதரவாளர்கள் மத்தியில் மர்ஜான் பழீல் கருத்துத் தெரிவிக்கும்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ், தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ் ஆகியோரிடத்தில் எவ்வித இனவாதங்களுக்கும் இல்லை என்பதை இது  எடுத்துக்காட்டுகிறது. இவர்களை இனவாதக் கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு இது சிறந்த உதாரணமாகும்.

   பழீல் ஹாஜியாரின் 35 வருட அரசியல் வாழ்க்கைக்குக் கிடைத்த பரிசு என, இதனைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எனது தந்தை பழீல் ஹாஜியார், தனது அரசியல்  வாழ்க்கையில்  ஆழ்ந்த சிந்தனையாளராகத் திகழ்ந்தார். ஒரு நொடிப்பொழுதேனும் பிசகாமல், கட்சி மாறாமல் இறுதி வரை செயற்பட்டார். அனைவருடனும் எல்லா சந்தர்ப்பத்திலும் தோழோடு தோழ் நின்று செயற்பட்டவர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் குடும்பத்தினருடன் அவருடைய இறுதி மூச்சு வரை நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் நடந்துகொண்டவர். இதனால்தான், அந்த நன்றி உணர்வை மறவாமல், இவ்வாறானதொரு சிறப்புக் கைங்கரியத்தை மேற்கொள்ளத் தீர்மானித்து, அவர்கள் என்னையும் எனது கட்சி ஆதரவாளர்களையும் கெளரவித்துள்ளனர். இதற்கு நான் எனது பேருவளை தொகுதி வாழ் மக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் சார்பாக இவர்களுக்கு  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

( ஐ. ஏ. காதிர் கான் )

3 comments:

  1. I do not care who get seats but Muslim community must send some educated, committed and talented people into parliament. what 22 mPs have done for us. Think about this. Now, out 22 mps do not elect at least 17 . 17 of them are not good enough

    ReplyDelete
  2. Hon. Marjan Faleel is a great leader and he has done very good changes in the Haj work during his last 3 months duty as Haj committee leader.
    We strongly belive that he will do very good job when he actually go to the parliment.
    We the team of SLPP - Ampara district Muslim Unit wish him good luck in his future endeavours.

    The society should get together with him to use his full efficiency.

    ReplyDelete
  3. Marjan Faleel is s good choice as a new Muslim candidate from Kalutara District to represent the Muslims of Beruwela, Aluthagama/Dhara Town and Kalutara in the SLPP/SLFP Alliance (“Sri Lanka Nidahas Podujana Sandanaya”) NATIONAL LIST as a candidate in the next general elections in April this year, Insha Allah. The choice made by PM Mahinda Rajapaksa is a well thought one and all Muslims/Muslim Vote Bank in Kalutara should unanimously decide to vote the “Sri Lanka Nidahas Podujana Sandanaya” and make him go to parliament. Marjan Hajiar can bring in around 40,000 votes to the Sri Lanka Nidahas Podujana Sandanaya” in the Kalutara District, Insha Allah. His father, Marhoom M.S.M. Faleel Hajiar a SLFP and Madam Sirimavo Bandaranaike LOYALIST, during his time as the Chief SLFP organizer for Beruwala, former member of the Western Provincial Council and former Beruwala Urban Council Chairman, did yoeman service to the Sinhalese and the Muslims in the district, not only as a politician, but also as a generous philanthropist. I knew him personally and had the opportunity to visit him at his Colombo residence many a time, sometimes along with Dr. Maharoof who was then SLFP District Organizer for Harispattuwa and Vice President of the SLFP and I was the SLFP District Organizer - Trincomalee District. Marhoom Faleel Hajiar was a close friend of ours and his sons, including Marjan respected their father's friends and were very humble to us.
    As an up and coming Muslim politician, he will be able to move forward to go to parliament and continue the work of his late father as an Nominated MP of the SLPP/SLFP Alliance, which his father could not achieve/was not blessed as an SLFPer, Insha Allah. The Muslim Vote Bank in Kalutara District should "UNITEDLY VOTE" him to be elected as an Member of Parliament in April 2020, Alhamdulillah, Insha Allah. HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise along with the new government with a 2/3 majority, especially from among the Muslim Youth. WITH MARJAN FALEEL, HE GOTABAYA RAJAPAKSA CAN MAKE THAT HAPPEN, INSHA ALLAH. WITH CANDIDATES LIKE MARJAN HAJIAR IN THE NATIONAL LIST, GETTING THE MUSLIM VOTE BANK TO BRING IN THE 2/3 MAJORITY IN PARLIAMENT MAY BE A REALITY, Insha Allah.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.