Header Ads



மட்டக்களப்பு தேவாலயத்திற்குள் நுழைந்த 2 முஸ்லிம் பெண்கள் உட்பட நால்வர் கைது

மட்டக்களப்பு செபஸ்டியன் தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த நால்வரால் பதற்ற நிலை ஏற்பட்ட
தாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த சிலையில் சந்தேகத்திற்கு இடமாக ஆலயத்திற்கு வந்த இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் அமைந்திருக்கும் புனித செபஸ்ரியன் தேவாலயத்தில் இன்று காலை ஆராதனை இடம்பெற்றுள்ளது.

இதன்போது தேவாலயத்தினுள் இரு முஸ்லிம் பெண்கள் உட்பட 4 பேர் நுழைந்துள்ளனர். அதனால் தேவாலயத்திற்குள் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆராதனையில் ஈடுபட்ட மக்கள், அருட்தந்தையூடாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களை பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண், அவரின் 39 வயதுடைய வாய் பேசமுடியாத மகள், 23 வயதுடைய மகன், 33 வயதுடைய மருமகன் ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.

பொலிஸார் அவர்களிடம் தொடர்ந்தும் மேற் கொண்ட விசாரணையின் போது, மகளின் நோயை குணப்படுத்துவதற்காக இரு மோட்டார் சைக்கிளில் சீயோன் தேவாலயத்துக்கு அவர்கள் சென்றதாகவும், அங்கு ஆராதனைகள் முடிந்து ஆலயம் பூட்டப்பட்டிருந்ததையடுத்து, ஆராதனை வேறு இடத்தில் நடப்பதாக அறிந்து இந்த தேவாலயத்துக்குள் வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதோடு, இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர். IBC

2 comments:

  1. Erumaigalukku kaathil ooothiyum payanillayo..!!!

    ReplyDelete
  2. இப்படியான சம்பவங்களால் நாட்டில் மத சௌஜன்னியம் பாதிக்கப்படலாம். ஒருவருடைய ஆலயத்தினுள் இன்னொருவர் செல்வது கூடாது அல்லது முடியாது என்ற நிலைமை வரலாம். இந்நாட்டில் வாழும் மக்கள் மதத்தால் வித்தியாசப்படினும் உறவால் ஒற்றுமையானவரகள் என்ற மனப்பாங்கு எப்போது வரப்போகின்றது. கடவுள் ஒருவன்தான் என்ற எண்ணம் எப்போது ஏற்படப் போகின்றது. வந்தவரகள் யார், ஏன் வந்தார்கள், என்ன உதவிக்காக வந்தார்கள் என்பதை முதலில் ஆராய்ந்துவிட்டுத்தான் பொலிஸ் நடவடிக்கைக்குச் சென்றிருக்க வேண்டும். எங்களுக்கு மதம் தேவையில்லை. மனிதாபிமானமும் நல்லிணக்கமும்தான் தேவை. டெல்கியில் தற்போது கலவரம் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த மனிதர்கள் எவ்வளவு ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர் உதவியாக இந்தக் காலகட்டத்தில் செயற்படுகின்றார்கள் என்பதனைப் பார்த்து எங்களைத் திருத்திக் கொள்ள வேண்டாமா. எங்களுக்குள்ளேயே எவ்வளவு நிகழ்வுகள் அண்மைக் காலத்தில் நடைபெற்றுள்ளன. அவற்றைப் பார்த்தாவது நாம் படிப்பினை பெற வேண்டாமா? சமூகங்களே! நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.