Header Ads



நாட்டை நாசமாக்கிய UNP க்கு, சிங்கள மக்கள் பாடம் புகட்ட வேண்டும் - மைத்திரிபால

"ஊழல், மோசடிகளினால் நாட்டை நாசமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் சிங்கள மக்கள் பாடம் புகட்ட வேண்டும்."

ன அறைகூவல் விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.

அவர் மேலும் கூறுகையில்,

"கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் ஓரணியில் நின்று கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தபடியால் அவர் அமோக வெற்றியடைந்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் படுதோல்வியடைந்தார்.

ஐ.தே.க. தலைமையிலான கூட்டணியின் படுதோல்விக்கும் அந்தக் கூட்டணி இன்று பிளவடைந்து காணப்படுகின்றமைக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே முழுப் பொறுப்பு.

ஒரு புறத்தில் பதவி ஆசையில் பிரதமர் கதிரையில் அமர்ந்திருந்த ரணில், மறுபுறத்தில் ஊழல், மோசடிகளுக்குத் தலைமை தாங்கினார்.

நல்லாட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணி தலைமையில் அமைகின்ற அரசு தக்க தண்டனையை வழங்கியே தீரும்.

எனவே, பொதுத் தேர்தலில் சிங்கள மக்கள் மட்டுமன்றி நாட்டிலுள்ள மூவின மக்களும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணி வெற்றியடையும் வகையில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்" - என்றார்.

6 comments:

  1. நாட்டின் தேசிய சட்டத்தை அவமதித்து அதற்கு பகிரங்கமாகவே எதிராகச் செயற்பட்ட மைத்திரிக்கு சட்டம் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுக்க ​வேண்டும்.

    ReplyDelete
  2. இவர் சொல்லுவது சரி யுஎன்பி நாட்டை நாசமாக்கியது, இவர் இலங்கை முழுக்க பாடல் பாடிக்கொண்டு இருந்துள்ளார். அமர பந்து ரூபசிங்க அமற பந்து ரூபசிங்க அமர பந்து ரூபசிங்க.
    😆 ஏய் யூ கிரேசி அமேசிங் 😅

    ReplyDelete
  3. சாத்தான் வேதம் ஓதுகின்றது

    ReplyDelete
  4. Chcheeeee vetkaaayillaaa...padupaavi

    ReplyDelete
  5. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யாதே என்ற பழமொழி இந்த நபருக்கு நல்ல பொருந்தும்.

    ReplyDelete
  6. "நுனலும் (தவளை) தன் வாயால் கெடும்"

    ReplyDelete

Powered by Blogger.