Header Ads



நிலநடுக்கம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுவதாக புவி சரிதவியல் பணியகம் தெரிவிப்பு

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்தியப் பெருங்கடலில் இன்று (12) அதிகாலை 2.34 அளவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும் இந்த நிலநடுக்கம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுவதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. 

இலங்கைக்கு அப்பால் சுமார் 250 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

5.4 ரிட்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் சுமார் 10 ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இலங்கையின் தென் பகுதிகளான காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டது. 

எனினும் பிட்டபெத்தர, குடகலஹேன மற்றும் தெஹியந்தர ஆகிய பகுதிகளில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்தாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தினால் இலங்கையிலோ அல்லது பிற நாடுகளிலோ சுனாமி அனர்த்தம் ஏற்படவில்லை.

1 comment:

  1. "வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்."
    (அல்குர்ஆன் : 67:16)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.