Header Ads



சஜித் அவர்களே, விவேகம் இல்லாத வேகம் அர்த்தமற்றது, தேர்தல் முடிந்தபின் உணர்வீர்கள்..!

அரசு இன்று பாராளுமன்றத்தில் நிதிப் பிரேரணைகள் இரண்டை கொண்டு வந்தது...
கொடுகடன்கள் மற்றும் அரச ஒப்பந்தக்காரர்களுக்கான நிலுவைப்பணம் வழங்கல் உட்பட பல விடயங்களுக்கு 350 பில்லியன் நிதியை கோரி இந்த பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
ஒரு சரியான எதிர்க்கட்சி - தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் என்ன செய்திருக்க வேண்டும் ?
இதனை அனுமதித்து...
“நாட்டின் நன்மை கருதி செய்தோம்.. கடன்களை குறைக்க ஒத்துழைத்தோம்... எதிர்க்கட்சி என்றால் எல்லாவற்றையும் எதிர்க்கமாட்டோம்” என்று கூறி மக்களின் மதிப்பை பெற்றிருக்க வேண்டும்...
அதைவிடுத்து பாராளுமன்றத்தின் கடைசி நாளில் இப்படி செய்ததன் மூலம் சொதப்பிக் கொண்டுள்ளனர்.
இனி அரசு என்ன செய்யும்...
“ பாருங்கள்... மக்களுக்கான அத்தியாவசிய சேவை வழங்கலில் சில நல்ல விடயங்களை செய்யவிருந்தோம். பாருங்கள்... எதிர்க்கட்சியினர் இப்படிச் செய்துவிட்டனர்...”
என்று கூறி தேர்தலில் விளாசித் தள்ளப் போகிறது...
இல்லையில்லை என்று எதிர்க்கட்சி வியாக்கியானம் கூறினாலும் அதனை பெரும்பான்மை மக்கள் முன் கொண்டு செல்ல ஊடக சப்போர்ட் அவர்களுக்கில்லை...
இந்த கடுப்பில் - அரசிடமிருந்து தங்களுக்கு வரவேண்டிய கொடுப்பனவு இழுபறியாகி அதிருப்தியாகி உள்ள பெரும் நிறுவனங்களின் ஆதரவும் எதிர்க்கட்சிக்கு அற்றுப்போகலாம்..
சஜித் அவர்களே அரசியலில் விவேகம் இல்லாத வேகம் அர்த்தமற்றது...
தேர்தல் முடிந்த பின்னர் இதனை நீங்கள் உணர்வீர்கள்..! Sivarajah Ramasamy

No comments

Powered by Blogger.